Home /News /sports /

அடுத்த இந்திய டெஸ்ட் கேப்டன் யார்?- ஸ்டீவ் ஸ்மித் பரிந்துரைக்கும் வீரர் யார் தெரியுமா?

அடுத்த இந்திய டெஸ்ட் கேப்டன் யார்?- ஸ்டீவ் ஸ்மித் பரிந்துரைக்கும் வீரர் யார் தெரியுமா?

ஸ்டீவ் ஸ்மித்

ஸ்டீவ் ஸ்மித்

இந்திய அணியில் காலியாக உள்ள டெஸ்ட் கேப்டன் பதவிக்கு விராட் கோலிக்கு பதிலாக தனக்குப் பிடித்த 2 வீரர்களை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணியில் காலியாக உள்ள டெஸ்ட் கேப்டன் பதவிக்கு விராட் கோலிக்கு பதிலாக தனக்குப் பிடித்த 2 வீரர்களை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்துள்ளார்.

    டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த விராட் கோலியின் முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவை தோற்கடித்ததையடுத்து, கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவரான, பேட்டிங் ஐகான் கோலி, இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

    டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்யும் கோஹ்லியின் முடிவு பெரும் விவாதத்தை கிளப்பிய நேரத்தில், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், காலியாக உள்ள பதவிக்கு முன்னாள் இந்திய கேப்டனுக்கு பதிலாக 'பிடித்த' இரண்டு நட்சத்திர வீரர்களை குறிப்பிட்டார்.

    நவீன சகாப்தத்தில் சிறந்த பேட்டர்களில் ஒருவரான ஸ்மித் இன்ஸ்டாகிராமில் கேள்வி-பதில் அமர்வில் பங்கேற்றார். அவரது சமூக ஊடக ஃபாலோயர்களுடன் ஊடாடும் அமர்வின் போது, ​​முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் பல பரபரப்பான பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    டீம் இந்தியா அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டனாக யாரை தேர்வு செய்வீர்கள் என்று ஸ்மித்திற்கு நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பினார். ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த ஸ்மித், ஆசிய ஜாம்பவான்களின் கேப்டனாக வெற்றிகரமாக செயல்பட்டதற்கு முதலில் கோஹ்லிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    பேட்டிங் மேஸ்ட்ரோ ஸ்மித் பின்னர் காலியாக உள்ள கேப்டன் பதவிக்கு இரண்டு சிறந்த போட்டியாளர்களை குறிப்பிட்டார் “முதலாவதாக, கடந்த ஆறு அல்லது ஏழு ஆண்டுகளாக இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திய விராட் கோலிக்கு வாழ்த்துக்கள். அவர் ஒரு அற்புதமான பணியைச் செய்துள்ளார், மேலும் ரோஹித் சர்மா அல்லது கே.எல் ராகுல் ஆகிய இருவர் கேப்டன் பதவி வகிக்க எனக்கு விருப்பமானவர்கள் என்று நான் கூறுவேன், ” என ஸ்மித் தனது பதிலை இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார்.

    கோலி 68 டெஸ்ட் கேப்டன்சியில் 40 வெற்றிகளுடன் ஆகச்சிறந்த இந்திய கேப்டனாக சிறந்து விளங்குகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 5,000 ரன்களைக் கடந்த மற்றும் 52-க்கும் அதிகமான பேட்டிங் சராசரியை எட்டிய ஒரே டெஸ்ட் கேப்டன் கோலி ஆவார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Steve Smith

    அடுத்த செய்தி