ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் களமிறங்கிய ஸ்மித் சதம் அடித்து விராட் கோலியன் சாதனையை பின்னுக்கு தள்ளி உள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆஷஸ் தொடரின் முதல் போட்டி பிரிங்காம் மைதானத்த்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பெய்னி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக பென்கார்ஃபட், வார்னர் களமிறங்கினர். போட்டியின் 4வது ஓவரில் டேவிட் வார்னர் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஃப்ராட் வீசிய பந்தில் எல்.பி.டபுள்.யூ முறையில் அவுட்டாகினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். ஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டிவ் ஸ்மித் மட்டும் நிதானமாக ஆடிவந்தார்.
ஆஸ்திரேலிய அணி 122 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. 10வது வீரராக களமிறங்கிய சிடில் உடன் ஜோடி சேர்ந்த ஸ்மித் அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். அபாராமாக ஆடிய ஸ்மித் 144 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஸ்மித்தின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 284 என்ற கௌரவமான ரன்களை பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ப்ராடு 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
பந்தை தேசப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடைக்கு பின் களமிறங்கிய ஸ்மித் இந்த போட்டியில் சதம் அடித்தன் மூலம் குறைந்த இன்னிங்சில் 24 சதங்கள் அடித்த விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். விராட் கோலி 123 இன்னிங்சில் 24 சதங்கள் அடித்திருந்தார். ஸ்மித் 118 இன்னிங்சில் 24 சதங்கள் அடித்து அசத்தி உள்ளார். இந்த பட்டியலில் டான் பிராட்மேன் 66 இன்னிங்ஸில் 24 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.
Also Read : இந்திய அணியில் பிளவா? கோலி, ரோஹித் தனித் தனியாக வெளியான புகைப்படங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.