ஸ்மித்..? கோலி..? உலகின் சிறந்த பேட்ஸ்மேன் இவர்தான்! ஷேன் வார்னே ஓபன் டாக்

ஒரு நாள் போட்டிகளில் விவியன் ரிசர்ட்ஸ் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தார். ஆனால் அவரையே கோலி மிஞ்சி விட்டார் - ஷேன் வார்ன்

news18-tamil
Updated: September 6, 2019, 3:51 PM IST
ஸ்மித்..? கோலி..? உலகின் சிறந்த பேட்ஸ்மேன் இவர்தான்! ஷேன் வார்னே ஓபன் டாக்
விராட் கோலி - ஸ்டிவ் ஸ்மித்
news18-tamil
Updated: September 6, 2019, 3:51 PM IST
கிரிக்கெட் போட்டிகளில் ஸ்மித், கோலி இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்பதற்கு ஷேன் வார்னே பதிலளித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் ஓராண்டு தடைக்கு பின் களமிறங்கிய ஸ்மித் ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். 3 டெஸ்ட்டில் பங்கேற்று 3 சதம், ஒரு அரை சதம் விளாசி உள்ளார். டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த கோலியை ஏற்கனவே கீழே இறக்கிவிட்டார். ஆஷஸ் தொடரில் தற்போது வரை 479 ரன்கள் உடன் 159.66 சராசரி வைத்துள்ளார்.

இதனிடையே ஸ்மித் மற்றும் கோலி இவர்களில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற ஆங்கில நாளிதழின் கேள்விக்கு வார்னே பதிலளித்துள்ளார். “டெஸ்ட் போட்டிகளில் கோலி, ஸ்மித் இருவரும் சிறப்பாக தான் விளையாடுகின்றனர். ஆனால் டெஸ்ட் போட்டியை பொருத்த வரை ஸ்மித் ஆட்டம் சிறப்பாக உள்ளது. அனைத்து விதமான போட்டிகளில் சிறந்தவர் என்றால் அது கோலி தான்.


ஒரு நாள் போட்டிகளில் விவியன் ரிசர்ட்ஸ் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தார். ஆனால் அவரையே கோலி மிஞ்சி விட்டார் என்று தான் சொல்லலாம். கிரிக்கெட்டின் அனைத்து வகையான சாதனையும் அவர் முறியடிக்கக் கூடியவர். கோலியின் மிகப் பெரிய ரசிகன் நான்.

கேப்டனாக அணியை சிறந்த முறையில் அணியை வழிநடத்தி செல்கிறார். சில சமயங்களில் போட்டிகளின் போது ஆக்ரேஷமாக அவர் செயல்பட்டாலும், அதை நான் மிகவும் விரும்புகிறேன்“ என்றும் வாரன் தெரிவித்துள்ளார்.

Also Watch : 

Loading...

First published: September 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...