ஸ்டெயின் கையிலிருந்து நழுவிய பந்தில் பவுண்டரி விளாசிய ஸ்மித்தின் வீடியோ வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியா தற்போது தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டி20 போட்டி ஜோகன்ஸ்பெர்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியின் போது தென்னாப்பிரிக்காவின் மூத்த வீரர் டெல் ஸ்டெயினுக்கும், ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர் ஸ்மித்க்கும் இடையே சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றது.
போட்டியின் மூன்றாவது ஓவரை ஸ்டெய்ன் வீச அதை ஸ்மித் எதிர்கொண்டார். அப்பொது எதிர்பாரதவிதமாக பந்து ஸ்மித்தின் கையில் இருந்து நழுவியது. அந்த பந்து ஸ்மித்திடம் உருண்டு சென்றது.
Dale with the Hadeda delivery #SAvAUS pic.twitter.com/YHsFCOazdA
— Harry The Hadeda (@hadedaharry) February 21, 2020
ஸ்கோர் செய்ய கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் எதிர்பார்த்து காத்திருந்த ஸ்மித், இது தான் நேரம் என்று இறங்கி வந்து தூக்கியடிக்க, அது பவுண்டரியானது. ஆனால் அது 'டெட் பால்’ அன்று அறிவிக்கப்பட்டதால் ரன் ஏதும் கொடுக்கவில்லை. முடிவில் ஸ்மித் 32 பந்துகளில் 45 ரன்கள் விளாச ஆஸ்திரேலிய அணி 196 ரன்கள் குவித்தது.
Also Read : சச்சின், தோனியை அருகில் உட்கார வைத்த திறமையான வேலைக்காரர் பாஸ்கரன்..! யார் இவர்..?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket