முகப்பு /செய்தி /விளையாட்டு / ICC Ranking| இன்னுமா ஜோ ரூட் நம்பர் 2 - கைல் ஜேமிசன் பாய்ச்சல்- டாப் 10-ல் எல்கர்- ஐசிசி ரேங்கிங் வெளியீடு

ICC Ranking| இன்னுமா ஜோ ரூட் நம்பர் 2 - கைல் ஜேமிசன் பாய்ச்சல்- டாப் 10-ல் எல்கர்- ஐசிசி ரேங்கிங் வெளியீடு

ஸ்டீவ் ஸ்மித்

ஸ்டீவ் ஸ்மித்

பந்துவீச்சாளர்களில், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் 8 இடங்கள் முன்னேறி, இப்போது மேம்படுத்தப்பட்ட ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நியூசிலாந்து ஸ்டார் பேட்டர் கேன் வில்லியம்சனை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியாவின் ஸ்டார் ஸ்டீவ் ஸ்மித் சமீபத்திய ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 3ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சிட்னி டெஸ்டில் ஸ்மித் 67 மற்றும் 23 ரன்களை எடுத்தார், வில்லியம்சன் தற்போது முழங்கையில் காயம் காரணமாக விளையாடவில்லை. தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் ஜோகன்னஸ்பர்க்கில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 96* ரன்கள் எடுத்ததைத் தொடர்ந்து நான்கு இடங்கள் முன்னேறி முதல் 10 இடங்களுக்குள் நுழைந்தார்.

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் எந்த அசைவும் இல்லை. மார்னஸ் லபுஷேன் 924 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அவர் சிட்னியில் 28 மற்றும் 29 ரன்கள் எடுத்தார், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 0 மற்றும் 24 ரன்களை எடுத்த பிறகும் ஆஷஸ் தொடரில் சொதப்பிய பிறகும் எப்படி 2ம் இடத்தில் நீடிக்கிறார் என்பது புரியாத புதிராக உள்ளது.

இலங்கையின் திமுத் கருணாரத்னே ஒரு இடம் முன்னேறி 6வது இடத்திற்கு முன்னேறினார், ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னரை 7வது இடத்திற்கு தள்ளினார். ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இந்திய நட்சத்திரங்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி முறையே தங்கள் நம்பர்.5 மற்றும் நம்பர்.9 இடங்களை தக்கவைத்துள்ளனர்.

முதல் 10 இடங்களுக்கு வெளியே பார்க்கும்போது, ​​ஆஸ்திரேலிய இடது கை ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 26வது இடத்தில் மீண்டும் நுழைந்தார். இங்கிலாந்துக்கு எதிரான சிட்னி டெஸ்டில் கவாஜா 137 மற்றும் 101* ரன்கள் எடுத்தார். மேலும், நியூசிலாந்து-வங்கதேசம் இடையிலான இரண்டாவது டெஸ்டைத் தொடர்ந்து லிட்டன் தாஸ் 17 இடங்கள் முன்னேறி 15-வது இடத்துக்கும், டெவோன் கான்வே 18 இடங்கள் முன்னேறி 29-வது இடத்துக்கும் வந்தனர்.

பந்துவீச்சாளர்களில், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் 8 இடங்கள் முன்னேறி, இப்போது மேம்படுத்தப்பட்ட ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். பங்களாதேஷுக்கு எதிரான கிறிஸ்ட்சர்ச் டெஸ்டில் ஜேமிசன் 114 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்தியாவுக்கு எதிரான வாண்டரர்ஸ் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்குப் பதிலாக ஐந்தாவது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் மற்றும் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் முதல் இரண்டு இடங்களை தக்கவைத்துள்ளனர்.

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தானின் ஷஹீன் அப்ரிடியா மற்றும் ஹசன் அலி, நியூசிலாந்தின் டிம் சவுத்தி மற்றும் நீல் வாக்னர் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் முதல் 10 இடங்களில் உள்ளனர்.

முதல் 10 இடங்களுக்கு வெளியே, பங்களாதேஷின் இபாதத் ஹொசைன் 17 இடங்கள் முன்னேறி 88வது இடத்துக்கும், ஷோரிபுல் இஸ்லாம் 34 இடங்கள் முன்னேறி 104வது இடத்துக்கும் வந்துள்ளனர். கிறிஸ்ட்சர்ச் டெஸ்டில் ஹொசைன் மற்றும் இஸ்லாம் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். முதல் டெஸ்ட்டில் நாயகனான இபாதத் ஹுசைன் அந்த டெஸ்ட்டில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வங்கதேச வெற்றியின் ஹீரோவானார்.

First published:

Tags: ICC Ranking, Joe Root, Kane Williamson, R Ashwin, Steve Smith, Virat Kohli