டான் பிராட்மேனின் 89 ஆண்டுகால சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஸ்டீவ் ஸ்மித்!

ஸ்மித் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு இரட்டைசதம், 2 சதங்கள் மற்றும் 2 அரை சதங்கள் விளாசி 671 ரன்கள் எடுத்துள்ளார்.

Vijay R | news18-tamil
Updated: September 11, 2019, 4:21 PM IST

ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் டான் பிராட்மேனின் 89 ஆண்டுகால டெஸ்ட் சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓராண்டு தடைக்கு பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பான ஆட்டத்தால் டெஸ்ட் தரவரிசையில் கோலியை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு ஆஷஸ் தொடரில் ஸ்மித் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு இரட்டைசதம், 2 சதங்கள் மற்றும் 2 அரை சதங்கள் விளாசி 671 ரன்கள் எடுத்துள்ளார்.

டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்த ஸ்மித் தற்போது ஜாம்பவான் டான் பிராட்மேனின் 89 ஆண்டுகால சாதனையை முறியடிக்க காத்திருக்கிறார். 1930ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் பிராட்மேன் 974 ரன்கள் எடுத்ததே தனிவீரரின் அதிகபட்ச ரன்னாக இருந்தது.

பிராட் மேனின் சாதனையை முறியடிக்க ஸ்மித் 304 ரன்கள் எடுக்க வேண்டும். கடைசி ஆஷஸ் தொடரிலும் ஸ்மித்தின் ஆதிக்கம் தொடர்ந்தால் பிராட் மேனின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read

Loading...

First published: September 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...