2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
12-வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணிகளை அறிவிக்க வருகிற 23-ம் தேதி கடைசி நாளாகும். இந்த தொடருக்கான நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. (CricketAustralia)
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ரிச்சர்ட்சன், நாதன் கொல்டர்-நைல், ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப், நாதன் லியோன், ஆடம் ஸாம்பா.
உலகக் கோப்பை அணியில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் இடம்பெறவில்லை. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைக்காலம் முடிந்ததால், ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இவர்களின் வருகை அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒற்றை இலக்க ரன்களில் சுருண்ட வீரர்கள்! டெல்லி அணியிடம் தோற்ற ஹைதராபாத்
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.