Home /News /sports /

ட்விட்டரை விட்டு வெளியே வா, தேர்வுக்குழுவின் கதவை அடித்து வீழ்த்து - இந்திய வீரருக்கு ஸ்மித் அறிவுரை

ட்விட்டரை விட்டு வெளியே வா, தேர்வுக்குழுவின் கதவை அடித்து வீழ்த்து - இந்திய வீரருக்கு ஸ்மித் அறிவுரை

கிரேம் ஸ்மித்

கிரேம் ஸ்மித்

இந்திய அணியில் ஏகப்பட்ட போட்டி நிலவுகிறது, தேர்வுக்குழுவுக்கும் கடினம்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும், ஆ..ஊ..ன்னா ட்விட்டரை எடுத்து ஆதங்கத்தைக் கொட்டக் கூடாது என்று ராகுல் திவேத்தியாவுக்கு தென் ஆப்பிரிக்கா முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் அறிவுரை வழங்கியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...

    ராகுல் திவேத்தியா நடந்து முடிந்த ஐபிஎல் 2022 தொடரில் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 12 இன்னிங்சில் 217 ரன்களுடன் அதிரடி பினிஷராக பல போட்டிகளை தோல்வியின் பிடியிலிருந்து மீட்டு வென்று கொடுத்துள்ளார். இவர் சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா தொடரிலும் இல்லை, தன் கேப்டன் ஹர்திக் பாண்டியா கேப்டனான பிறகு அயர்லாந்துக்கான தொடர் அணியிலும் இல்லை. இதனால், ‘எதிர்பார்ப்பு காயப்படுத்துகிறது’ என்று ட்வீட் செய்திருந்தார்.

    இந்நிலையில் இவரது ஆதங்கத்தைப் புரிந்து கொண்ட கிரேம் ஸ்மித், “அவர் (ராகுல் திவேத்தியா) சிறப்பாக செயல்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியும். அந்த அணியில் நிறையசிறப்பாக செயல்பட்ட வீரர்கள் எண்ணிக்கையில் உள்ளனர். விஷயம் என்னவென்றால், இந்திய அணியில் இடங்களுக்கு மிகவும் போட்டி உள்ளது. நான் அவரிடம், 'ட்விட்டரில் இருந்து விலகி, உங்கள் விளையாட்டில் கவனம் செலுத்துங்கள், செயல்படுங்கள்' என்று கூறுவேன். அடுத்த முறை அணி அறிவிக்கப்படும்போது யாரும் உங்களை வெளியே விட முடியாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனென்றால் நீங்கள் அந்த கதவைத் ஏற்கெனவே உடைத்து வீழ்த்தி விட்டீர்கள் என்று கொள்ளுங்கள்.

    இந்தியாவில் திறமையான வீரர்கள் பலர் உள்ளனர். தேர்வாளர்கள், ராகுல் (டிராவிட்) மற்றும் கேப்டன் ரோஹித் (சர்மா) ஆகியோருக்கு அணியின் கலவை எப்படி இருக்கும், போட்டியிடும் வீரர்கள் யார், அணியின் சமநிலை என்ன என்பது பற்றிய யோசனை அவர்களுக்கு இருக்கும். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடுகிறீர்கள், நிலைமைகள், மைதானங்கள் வேறு, எனவே உலகக் கோப்பைக்கு செல்லும் உங்கள் அணியை உருவாக்குவது குறித்து சிந்திக்க வேண்டும்” என்றார் கிரேம் ஸ்மித்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cricket, India vs South Africa

    அடுத்த செய்தி