ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Shardul Thakur| ‘கிரேட்’களின் பட்டியலில் ஷர்துல் தாக்கூர்-1 ரன்னில் கபில் சாதனையை தவறவிட்டார், போத்தமை முந்தினார்

Shardul Thakur| ‘கிரேட்’களின் பட்டியலில் ஷர்துல் தாக்கூர்-1 ரன்னில் கபில் சாதனையை தவறவிட்டார், போத்தமை முந்தினார்

ஷர்துல் தாக்கூர்

ஷர்துல் தாக்கூர்

இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஷர்துல் தாக்கூர் ஓவல் மைதானத்தில் பல தீபங்களை ஏற்றினார், பிரமாதமான ஒரு அரைசதத்தை அவர் எடுத்ததில் கிரேட் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். அவரது சாதனைகள் இதோ:

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஷர்துல் தாக்கூர் ஓவல் மைதானத்தில் பல தீபங்களை ஏற்றினார், பிரமாதமான ஒரு அரைசதத்தை அவர் எடுத்ததில் கிரேட் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். அவரது சாதனைகள் இதோ:

31- ஷர்துல் தாக்கூர் தன் அரைசதத்தை 31 பந்துகளில் எடுத்தார், இது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர் ஒருவர் எடுக்கும் இரண்டாவது அதிவேக அரைசதம், முன்னதாக கபில்தேவ் கராச்சியில் 1982-ல் 30 பந்துகளில் அதிரடி அரைசதம் எடுத்தார், 1 ரன்னில் கபில் சாதனையை தவற விட்டார் ஷர்துல்.

ஸ்ட்ரைக் ரேட்டில் 36 பந்துகளில் 57 அடித்ததில் இங்கிலாந்தில் டெஸ்ட்டில் 2வது நல்ல ஸ்ட்ரைக் ரேட் ஆகும். 1982 லார்ட்ஸ் டெஸ்ட்டில் கபில்தேவ் 55 பந்துகளில் 89 ரன்கள் விளாசியதை மறக்க முடியாது அந்த இன்னிங்ஸ்தான் சிறந்த இந்திய ஸ்ட்ரைக் ரேட்.

இங்கிலாந்தில் அதிவேக அரைசதம் எடுத்த 3வது வீரர் ஆனார் ஷர்துல் தாக்கூர். நியூஸிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தின் கிரேட் ஆல்ரவுண்டர் இயன் போத்தம் 32 பந்துகளில் அரைசதம் எடுத்ததே அதிவேக அரைசதம் அதை முறியடித்தார் ஷர்துல் தாக்கூர். போத்தமின் சாதனையும் ஓவலில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்கு முன்னர் 2008-ல் டிம் சவுதி 29 பந்தில் சதம் எடுத்தார்.

Also Read: Shardul Thakur| ஷர்துல் தாக்கூரிடமிருந்து கத்துக்கலாமே! 191 ரன்களுக்கு மடிந்த பிறகு உமேஷ், பும்ரா அபாரம்

 23.33- ரகானேவின் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சராசரி. இது 2வது மோசமான சராசரியாகும்.

11- செடேஷ்வர் புஜாராவை ஜேம்ஸ் ஆண்டர்சன் பெவிலியன் அனுப்பிய எண்ணிக்கை 11 ஆனது. முன்னர் ஸ்டூவர்ட் பிராட், மைக்கேல் கிளார்க்கை 9 முறை அவுட் ஆக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Also Read: சீனியர்னா என்ன? பெர்ஃபார்ம் பண்ணுங்கப்பா- தாக்கிய ஜாகீர் கான்

முதல் நாள் ஆட்டத்தில் 13 விக்கெட்டுகள் விழுந்துள்ளன. 1983க்குப் பிறகு ஓவலில் அதிக விக்கெட்டுகள் ஒரே நாளில் விழுந்துள்ளது.

First published:

Tags: India Vs England, Shardul thakur