• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • நியூசிலாந்துக்கு எதிராக ஷர்துல் ஆடியிருந்தால் உலக டெஸ்ட் சாம்பியன் நாம்தான் - அடித்துக் கூறுகிறார் முன்னாள் செலெக்டர்

நியூசிலாந்துக்கு எதிராக ஷர்துல் ஆடியிருந்தால் உலக டெஸ்ட் சாம்பியன் நாம்தான் - அடித்துக் கூறுகிறார் முன்னாள் செலெக்டர்

ஷர்துல் தாக்கூர்

ஷர்துல் தாக்கூர்

நியூசிலாந்துக்கு எதிராக நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஷர்துல் தாக்கூர் ஆடியிருந்தால் நாம் தான் உலக சாம்பியன் என்று முன்னாள் ஸ்பின்னரும் அணித்தேர்வுக்குழு உறுப்பினருமான சரந்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    நியூசிலாந்துக்கு எதிராக நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஷர்துல் தாக்கூர் ஆடியிருந்தால் நாம் தான் உலக சாம்பியன் என்று முன்னாள் ஸ்பின்னரும் அணித்தேர்வுக்குழு உறுப்பினருமான சரந்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

    ஓவல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் விளாசி, பிறகு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி கடும் திருப்பு முனை ஏற்படுத்திய ஷர்துல் தாக்கூரை ஒருநாள், டி20, டெஸ்ட் மூன்று வடிவத்திலுமே அணியில் வைத்து 2023 ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய ஆல்ரவுண்டராக உருவாக்க வேண்டும் என்கிறார் சரந்தீப் சிங். இவர் கூறுவது பிரமாதமான கருத்தாகும், ஆனால் கோலி லாபி ஹர்திக் பாண்டியாவைத்தான் விரும்பும். அஸ்வினா ஜடேஜாவா என்று தேவையில்லாத ஒரு சர்ச்சையை கோலி கிளப்பிவிட்டது போல் நாளை ஷர்துல்லா பாண்டியாவா என்று இன்னொரு சர்ச்சையைக் கிளப்பி விட்டு அதில் பாண்டியாவை மறைமுகமாக கோலி ஆதரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    இந்நிலையில் சரந்தீப் சிங் கூறியதாவது, “நான் எப்போதுமே ஷர்துல் தாக்கூரின் பெரிய விசிறி. மும்பை அணியில் ஷர்துல் தாக்கூர் முதல் தரப் போட்டிகளில் ஒவ்வொரு இன்னிங்ஸ்களிஉம் 25-30 ஓவர்கள் வீசக்கூடியவர். இப்போது கூட பும்ராவுக்கு அடுத்ததாக ஷர்துல் 2வது வேகப்பந்து வீச்சாளராக இருக்க வேண்டும். இவரை 2023 உலகக்கோப்பைக்கு ஒரு ஆல்ரவுண்டராக வளர்த்தெடுக்க வேண்டும்.

    7-ம் நிலையில் இவரைப்போன்ற ஒரு பேட்ஸ்மென் இருப்பது நல்லது. பீல்டிங்கிலும் திறமையானவர். இவரை டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து ஆட வைக்க வேண்டும். ஹர்திக் பாண்டியா நல்ல பேட்ஸ்மென், ஆனால் அவரது பவுலிங் ஒரு கவலை. புவனேஷ்வர் குமார், ஷமி எத்தனை காலம் நீடிப்பார்கள் என்று தெரியவில்லை, எனவே ஷர்துலை அங்கு உருவாக்க வேண்டியுள்ளது. பும்ராவுடன் சிராஜ், ஷர்துலை ஆட வைக்க வேண்டும்.

    மிக முக்கியமான விக்கெட்டான ஜோ ரூட்டை எல்.பி. செய்து வெளியேற்றிய ஷர்துல் தாக்கூர்


    ஷர்துல் மட்டும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஆடியிருந்தால் நாம் ஐசிசி கோப்பையை வென்றிருப்போம். ஷர்துல் இருந்திருந்தால் ஐசிசி டைட்டில் நமக்குத்தான். குறிப்பாக அந்தப் பிட்ச் ஷர்துல் ரக பவுலிங்குக்குப் பொருத்தமானது. பேட்டிங்கிலும் நமக்கு ஒரு பங்களிப்பை செய்திருப்பார்” என்கிறார் சரந்தீப் சிங்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: