முகப்பு /செய்தி /விளையாட்டு / கங்குலியுடன் இணைந்து காதலர் தின வாழ்த்து சொன்ன இலங்கை அம்பையர்… தாறுமாறாக கமென்ட் அடிக்கும் நெட்டிசன்கள்

கங்குலியுடன் இணைந்து காதலர் தின வாழ்த்து சொன்ன இலங்கை அம்பையர்… தாறுமாறாக கமென்ட் அடிக்கும் நெட்டிசன்கள்

குமார் தர்மசேனா - கங்குலி

குமார் தர்மசேனா - கங்குலி

2009ஆம் ஆண்டில் இருந்து ஐசிசியின் நடுவராக தர்மசேனா பணியாற்றி வருகிறார். இதுவரை அவர்75 டெஸ்ட், 118 ஒருநாள் மற்றும் 42 டி20 போட்டிகளில் நடுவராக அவர் பணியாற்றியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமிஸ் ராஜாவுடன் இணைந்து இலங்கையை சேர்ந்த அம்பையர் குமார் தர்மசேனா காதலர் தின வாழ்த்தை சொல்லியுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் அவரது ஃபேஸ்புக் பதிவில் தாறுமாறாக கமென்ட் செய்து வருகின்றனர். குமார் தர்மசேனாவின் இந்த பதிவு கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 14ஆம் தேதியான இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் காதலர்கள் ஜோடியாக தங்களது புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

காதலர் தினத்தையொட்டி சமூக வலைதளங்களில் காதலர் தின பதிவுகள் ட்ரெண்டாகி வருகின்றனர். திருமணம் முடித்தவர்களும் தங்களது இணையின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தி வாழ்த்துகளை தெரிவிக்கிறார்கள். இன்னும் சிலர் தான் இனி சிங்கிள் இல்லை என்று கூறி தங்களது உள்ளம் கவர்ந்தவர்களை இந்நாளில் உலகுக்கு அறிமுகம் செய்கின்றனர். இப்படியாக லவ்வர்ஸ் டே கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இலங்கையை சேர்ந்த அம்பையர் குமார் தர்மசேனா கங்குலி மற்றும ரமிஸ் ராஜாவுடன் எடுத்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் என்று கூறி 3 ஹார்ட்டின்களை பதிவில் போட்டுள்ளார்.

இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் கிண்டலாக கமென்ட்டுகளை செய்து வருகின்றனர். இலங்கையை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான குமார் தர்மசேனா அந்த அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி 207 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 2009ஆம் ஆண்டில் இருந்து ஐசிசியின் நடுவராக தர்மசேனா பணியாற்றி வருகிறார். இதுவரை அவர்75 டெஸ்ட், 118 ஒருநாள் மற்றும் 42 டி20 போட்டிகளில் நடுவராக அவர் பணியாற்றியுள்ளார்.

First published:

Tags: Cricket