ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘இந்தியாவுடனான தோல்விக்கு இந்த ஒரு விஷயம்தான் காரணம்’ - இலங்கை பயற்சியாளர் ஓபன் டாக்

‘இந்தியாவுடனான தோல்விக்கு இந்த ஒரு விஷயம்தான் காரணம்’ - இலங்கை பயற்சியாளர் ஓபன் டாக்

சதம் அடித்த இலங்கை கேப்டன் தசுன் ஷனகாவை பாராட்டும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா

சதம் அடித்த இலங்கை கேப்டன் தசுன் ஷனகாவை பாராட்டும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா

இந்தியாவின் பேட்டிங் லைன் அற்புதமானது. எனவே அவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் கட்டுப்படுத்துவது மிகக் கடினம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடனான தோல்வி குறித்து அந்த இலங்கை அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் பேட்டி அளித்துள்ளார். அந்த அணியின் கேப்டன் ஷனகா மிகக்கடுமையாக போராடிய நிலையில் இலங்கை அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அடுத்த ஒருநாள் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதையடுத்து 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து  373 ரன்களை குவித்தது. இந்திய அணியின் விராட் கோலி 113 ரன்களை எடுத்தார். கேப்டன் ரோகித் சர்மா 83 ரன்களும், சுப்மன் கில் 70 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அந்த அணியின் கேப்டன் தசுன் ஷனகா 108 ரன்களை எடுத்தார். 250 ரன்களுக்குள் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் ஷனகா சிறப்பாக விளையாடி ஸ்கோரை 300 ரன்களை தாண்ட செய்தார்.

முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இலங்கை அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் கூறியதாவது- நாங்கள் வெற்றி இலக்கை நெருங்கி விட்டோம். எங்களுக்கு தொடக்கம் நன்றாக அமையவில்லை. முதல் 10 ஓவர்களில் மிக மோசமாக விளையாடி விட்டோம். அதே நேரம், இந்தியாவை முதல் 10 ஓவர்களில் நன்றாக ஆடுவதற்கு விட்டு விட்டோம். இதுதான் எங்கள் தோல்விக்கு முக்கிய காரணம்.

இந்தியாவின் பேட்டிங் லைன் அற்புதமானது. எனவே அவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் கட்டுப்படுத்துவது மிகக் கடினம். விராட் கோலி போன்ற ஆட்டக்காரர்களின் கேட்ச்சை மிஸ் செய்துவிட்டோம். அதனால் எங்களுக்கு அதிக சேதம் ஏற்பட்டது.

India vs Srilanka ODI : 67 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது இந்தியா…

எங்கள் அணியின் கேப்டன் தசுன் ஷனகா அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவரைப் போன்றவர் நிச்சயமாக ஐபிஎல் அணிகளுக்கு தேவை. ஐபிஎல் அணிகளின் பார்வை இப்போது ஷனகா பக்கம் திரும்பியிருக்கும். விரைவில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

First published:

Tags: Cricket, India vs srilanka