ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்தியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிப்பு…

இந்தியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிப்பு…

இலங்கை கிரிக்கெட் அணி

இலங்கை கிரிக்கெட் அணி

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யவுள்ள இலங்கை அணி 3 போட்டிகளைக் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். வங்கதேசத்துடன் உடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும், டெஸ்டில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் 2 டெஸ்டிலும் வெற்றியைத் தேடித் தந்தனர். இதையடுத்து இலங்கை அணியுடனான 20 ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியஅணி பங்கேற்கவுள்ளது. அடுத்த ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலக்கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான கிரிக்கெட் தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யவுள்ள இலங்கை அணி 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி ஜனவரி 3ஆம் தேதி மும்பையிலும், இரண்டாவது 20 ஓவர் போட்டி ஜனவரி 5 ஆம் தேதி புனேவிலும், கடைசி டி20 ஜனவரி 7ஆம் தேதி ராஜ்கோட் சவுராஷ்டிரா மைதானத்திலும் நடைபெறுகிறது. இதையடுத்து 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டி ஜனவரி 10ஆம் தேதி கவுகாத்தி பரஸ்பரா மைதானத்திலும், 2ஆவது போட்டி ஜனவரி 12ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், 3ஆவது போட்டி ஜனவரி 15 ஆம் தேதி திருவனந்தபுரம் மைதானத்திலும் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 20 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தசுன் ஷனகா (கேப்டன்), பதும் நிஸ்ஸங்கா, அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, குசால் மெண்டிஸ் (ஒரு நாள் போட்டிகளுக்கு துணை கேப்டன்), பானுக ராஜபக்சே (டி20 க்கு மட்டும்), சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்கா (டி20 துணை கேப்டன்),

அஷென் பண்டாரா, மஹீஷ் தீக்ஷனா, ஜெப்ரி வான்டர்சே (ஒருநாள் போட்டிக்கு மட்டும்), சமிகா கருணாரத்னே, டில்ஷான் மதுஷங்கா, கசுன் ராஜிதா, நுவனிது பெர்னாண்டோ (ஒருநாள் போட்டிகளுக்கு மட்டும்), துனித் வெல்லலகே, பிரமோத் மதுஷன், லஹிரு குமார மற்றும் நுவான் துஷார (டி20க்கு மட்டும்). ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியல் - ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்சல் படேல், உம்ரான் மாலிக் , சிவம் மாவி, முகேஷ் குமார்.

ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியல்- ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.

இந்த தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஆப்பில் இந்த தொடரை பார்க்கலாம். இதேபோன்று டிடி ஸ்போர்ட்ஸ் சேனலிலும் இந்தியா – இலங்கை தொடரை பார்த்து மகிழலாம்.

தென்னாப்பிரிக்காவை ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா… 2ஆவது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி…

டி20 போட்டியில் இரு அணிகளும் இதுவரை 26 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா 17 முறையும், இலங்கை 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவு எடுக்கப்படவில்லை.

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு…

ஒருநாள் போட்டிகளை பொருத்தவரையில் இரு அணிகளும் 162 முறை விளையாடியுள்ளன. இதில் இந்தியா 93 முறையும், இலங்கை 57 தடவையும் வெற்றி பெற்றுள்ளன. 11 ஆட்டங்களில் முடிவு எடுக்கப்படவில்லை.

First published:

Tags: Cricket