Home /News /sports /

2021 ஐபிஎல் இறுதியில் சிஎஸ்கே சாம்பியன் ஆனது நினைவில் இருந்தது - இலங்கை கேப்டன் தசுன் ஷனகா

2021 ஐபிஎல் இறுதியில் சிஎஸ்கே சாம்பியன் ஆனது நினைவில் இருந்தது - இலங்கை கேப்டன் தசுன் ஷனகா

இலங்கை வெற்றி, சிஎஸ்கே வெற்றி

இலங்கை வெற்றி, சிஎஸ்கே வெற்றி

இலங்கை கேப்டன் ஷனகா, ஐபிஎல் 2021-ல் தோனியின் தலைமையில் சிஎஸ்கே சாம்பியன் ஆனபோது மேற்கொண்ட உத்தியை நினைவில் கொண்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • interna, IndiaDubaiDubai
ஏகப்பட்ட உள்நாட்டு குழப்பங்கள், பொருளாதார நசிவு நிலையிலும் இலங்கை அணியினர் தங்களை திரட்டிக் கொண்டு ஆசியக் கோப்பையை வென்றது உண்மையில் பெரிய விஷயமே.

எல்லாம் இருந்தும், ஆயிரம் இருந்தும் வகைகள் இருந்தும் இந்திய அணி வெறும் பில்ட் அப் தான் காகிதப்புலிகள் என்பதை இன்னொருமுறை நிரூபித்து வெளியே வருகையில் இலங்கை கேப்டன் ஷனகா, ஐபிஎல் 2021-ல் தோனியின் தலைமையில் சிஎஸ்கே சாம்பியன் ஆனபோது மேற்கொண்ட உத்தியை நினைவில் கொண்டுள்ளார்.

முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 105 ரன்களுக்குச் சுருண்டதோடு ஆப்கான் அதை 10 ஒவர்களில் விரட்டி செம உதை வாங்கியதை மீறி எழுச்சி பெற்றது இலங்கை. நன்றாக ஆடிக்கொண்டே தோற்கிறது இந்தியா. இலங்கையின் வெற்றி மேலும் ஆழமான வரலாற்று அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

58/5 என்ற நிலையிலிருந்து பனுகா ராஜபக்ச, ஹசரங்கா சேர்ந்து வெளுத்து வாங்க ஸ்கோர் 170 வரை சென்றது, பதிலுக்கு பாகிஸ்தான் 147 ரன்களுக்குச் சுருண்டது.
இலங்கை கேப்டன் ஷனகாவுக்கு இது ஒரு பெரிய மகுடம், வருங்கால இளம் கிரிக்கெட் சந்ததியினருக்கு ஒரு பெரிய உத்வேகமே கொடுத்துள்ளார் கேப்டன் ஷனகா.

இந்நிலையில் வெற்றிக்குப் பிறகு ஷனகா கூறியதாவது:
ரசிகர்களுக்கு நன்றி, பெரிய அளவில் சப்போர்ட் கொடுத்தனர். அவர்களை இன்று பெருமையடையச் செய்திருக்கிறோம். ஐபிஎல் 2021-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அனைத்து கணிப்புகளையும் மீறி  முதலில் பேட் செய்து வெற்றியும் பெற்றது என் நினைவில் வந்தது.

இளம் வீரர்கள் நிலைமைகளை சரிவர புரிந்து கொள்கின்றனர். வனிந்து ஹசரங்கா 58/5இலிருந்து ஸ்கோர் வர பெரிய தாக்கம் செலுத்தியுள்ளார். கடைசி பந்து சிக்ஸ் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. 170 என்பது மனரீதியாக ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தக் கூடியது, 160 என்றால் விரட்டலாம் என்ற நம்பிக்கை இருக்கும்.

இதையும் வாசிக்க: போய் இலங்கை அல்லது பாகிஸ்தான் ஜெர்சியை அணிந்து வா: இந்திய ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பால் அதிர்ச்சி

மதுசங்கா நிச்சயம் நன்றாக வீசுவார் என்று தெரியும். ஒரு கேப்டனாக நான் அவருக்கு ஆதரவு அளித்தேன். முதல் போட்டி ஆப்கானுக்கு எதிராக அப்படி நடந்தது உண்மையில் நல்லதாக அமைந்தது. ஏனெனில் அதன் பிறகே அனைவரும் சேர்ந்து விவாதித்து எழுச்சி பெற்றோம். ஒவ்வொரு வீரரும் பங்களிப்பு செய்ததால்தான் சாம்பியன் ஆனோம். இறுதிப் போட்டியில் பீல்டிங் பெரிய முன்னேற்றம் கண்டது.  இலங்கை கிரிக்கெட் வாரியம் மற்றும் தேர்வுக்குழுவுக்கும் நன்றி.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Asia cup, Cricket match, Srilanka

அடுத்த செய்தி