Home /News /sports /

மெண்டிசுக்கு நான்கு ‘லைஃப்’... டெத் ஓவர் படுமோசம்.. ஆசிய கோப்பையிலிருந்து வங்கதேசம் வெளியேற்றம்

மெண்டிசுக்கு நான்கு ‘லைஃப்’... டெத் ஓவர் படுமோசம்.. ஆசிய கோப்பையிலிருந்து வங்கதேசம் வெளியேற்றம்

வெற்றி கொண்டாட்டத்தில் இலங்கை வீரர்கள்

வெற்றி கொண்டாட்டத்தில் இலங்கை வீரர்கள்

ஆசியக் கோப்பை 2022 தொடரில் நேற்று துபாயில் நடைபெற்ற போட்டியில் பேட்டிங்கில் ஓரளவுக்கு தெம்பு காட்டிய வங்கதேசம் பிறகு பவுலிங், பீல்டிங், டெத் ஓவரில் சொதப்பல் என்று பெரிய இலக்கைக் கூட தடுக்க முடியாமல் இலங்கையிடம் சரணடைந்து தோல்வி கண்டது,

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Inter, IndiaUAEUAE
ஆசியக் கோப்பை 2022 தொடரில் நேற்று துபாயில் நடைபெற்ற போட்டியில் பேட்டிங்கில் ஓரளவுக்கு தெம்பு காட்டிய வங்கதேசம் பிறகு பவுலிங், பீல்டிங், டெத் ஓவரில் சொதப்பல் என்று பெரிய இலக்கைக் கூட தடுக்க முடியாமல் இலங்கையிடம் சரணடைந்து தோல்வி கண்டது, இத்துடன் ஆசியக் கோப்பையில் அவர்களது ஆட்டமும் முடிவுக்கு வந்து விட்டது.

வங்கதேச தோல்விக்குக் காரணம் மெண்டிஸுக்கு 4 லைஃப் கொடுத்ததே. நேற்று இலங்கை வெற்றி பெற்றதில் குசல் மெண்டிஸ் 37 பந்துகளில் அடித்த 60 ரன்கள் பெரிய பங்களிப்பு செய்தது என்பதை விட அவருக்கு நான்கு முறை வங்கதேச பீல்டர்கள் கொடுத்த வாழ்வுதான் இலங்கையை வெற்றி பெறச் செய்தது என்றால் மிகையாகாது.

குசல் மெண்டிஸ் 3 பந்துகளில் 2 ரன்கள் எடுத்திருந்த போது டஸ்கின் அகமது பந்தில் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் ஒரு கேட்சை விட்டார், இது கொஞ்சம் கடினமான வாய்ப்புதான். இந்தக் கேட்சை எடுத்திருந்தால் வங்கதேசம் நிச்சயம் வென்றிருக்கும்.
பிறகு 16 பந்துகள்ல் 29 ரன்கள் எடுத்திருந்த போது நோ-பாலில் கேட்ச் ஆனார். இன்னொரு முறை விக்கெட் கீப்பர் கேட்ச் எடுத்தார், ஆனால் நடுவர் நாட் அவுட் என்று கூற ரிவியூ செய்யாமலே விட்டு விட்டனர்,

இதனால் அந்தப் பந்து வைடு என்று அறிவிக்கப்பட்டது. பிறகு 26 பந்துகளில் 44 ரன்கள் இருந்த போது அவர் ரன் அவுட் ஆகியிருக்க வேண்டியது அதிலும் தப்பினார் மெண்டிஸ். இதெல்லாம் பெரிய அளவில் இலங்கையைக் காப்பாற்றியது, வங்கதேசத்தைக் கைவிட்டது.

Also Read : ஹர்திக் பாண்டியாதான் அடுத்த தோனி, விரைவில் கேப்டனாவார் - ஹர்பஜன் சிங்

பங்களாதேஷ் நேற்று பரிசோதனை முயற்சியாக ‘பிஞ்ச் ஹிட்டர்’ என்ற பழைய ஒரு ஐடியாவுக்கு மீண்டும் உயிர் கொடுத்து ஸ்பின்னர் மெஹதி ஹசன் மிராசை ஓப்பனிங்கில் இறக்கி விட்டது. அவரும் 26 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 38 ரன்களை விளாசினார். இது உண்மையில் மிராக்கிள்தான் ஏனெனில் 4 ஆண்டுகள் கழித்து மெஹதி முதல் டி20-யில் ஆடுகிறார். சபீர் ரஹ்மான் இதுவரை ஓப்பனிங்கில் ஆடியதே இல்லை, அவர் 5 ரன்களில் வெளியேறினார். இவர் ஆட்டமிழந்ததை பொருட்படுத்தாத மெஹதி அடுத்த ஓவரில் 2 சிக்சர்களை விளாசினார். பவர் ப்ளேயில் 55/1 என்று இருந்த வங்கதேசம் மெஹதி ஹசன், முஷ்பிகுர் ரஹிம் (4) விக்கெட்டுகளை இழந்தது.

பிறகு ஷாகிப் அல் ஹசன் (24), அபீப் ஹுசைன் (22 பந்தில் 39) அணியை மீட்டெடுக்க, கடைசியில் மஹமுதுல்லா 27 ரன்களை எடுக்க அன்று ஆப்கானுக்கு எதிராக நன்றாக ஆடிய மொசாடெக் ஹுசைன் 9 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் விளாசினார். டஸ்கின் அகமது தன் பங்குக்கு 6 பந்தில் 11 ரன்கள் எடுக்க வங்கதேசம் 183/7 என்ற இலக்கை எட்டியது. இலங்கை தரப்பில் இடது கை ஸ்விங் பவுலர் தில்ஷன் மதுஷங்க 4 ஓவர் 26 1 விக்கெட். சிஎஸ்கேவின் தீக்‌ஷனா 4 ஓவர் 23 ஒரு விக்கெட்.

ஆனால் அசிதா பெர்னாண்டோ 4 ஓவர் 51 ரன்கள். ஹசரங்கா 2 விக்கெட்டுகளை எடுத்தாலும் 4 ஓவர் 41 ரன்களை விட்டுக் கொடுத்தார்.சமிகா கருணரத்னே 4 ஓவர் 32 ரன் 2 விக்கெட்.
இலங்கையின் நிசாங்கா, மெண்டிஸ் நிதானமாக 3 ஒவர் 13 ரன் என்றுதான் தொடங்கினர், ஆனால் 4, 5 ம் ஓவர்களில் மிரட்டினர். மெண்டிஸ், ஸ்வீப், ஸ்லாக் ஸ்வீப் என்று மெண்டிஸ் ஷாகிப்பை 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் அந்த அணிக்கு நிம்மதியை கொடுத்தார் எப்படி எனில் நிசாங்கா, அசலங்காவை வீழ்த்தினார். இருவருமே ஷார்ட் பிட்ச் பந்துகளில் காலியாயினர். நிசாங்கா 1 சிக்ஸ், 2 நான்குகளுடன் 20 ரன்னில் வெளியேறினார். எபாதத் பிறகு தனுஷ்கா குணதிலகாவையும் வீழ்த்தினார். பனுகா ராஜபக்சவை தஸ்கின் அகமது வீழ்த்த இலங்கை 8.5 ஓவர்களில் 77/4 என்று ஆனது.

மெண்டிஸ் ஏகப்பட்ட அதிர்ஷ்டங்களுடன் 37 பந்தில் 60 விளாச, கேப்டன் ஷனகா மேட்சை மாற்றிய 33 பந்து 45 ரன் இன்னிங்சை ஆட சமிகா கருணரத்னே 16 ரன்களையும் அசிதா பெர்னாண்டோ 10 ரன்களையும் பங்களிப்பு செய்ய இலங்கை அணி 19.2 ஓவர்களில் 184/8 என்று வென்றது. அருமையாக வீசிய எபாதத் ஹுசைன் கடைசியில் 2 ஒவர்களில் இலங்கைக்கு 25 ரன்கள் தேவை என்ற நிலையில் ஒழுங்காக வீசியிருந்தால் இலங்கை தோற்றிருக்கும், ஆனால் எபாதத் 17 ரன்களை அந்த ஓவரில் கொடுத்தார், இலங்கை அடுத்த ஓவரில் வென்று விட்டது. வங்கதேசம் உதிரிகள் வரையில் 8 வைடுகள், 4 நோ-பால்களுடன் 17 ரன்களை விட்டுக்கொடுத்தது. ஆட்ட நாயகன் குசல் மெண்டிஸ்.
Published by:Raj Kumar
First published:

Tags: Asia cup, Bangladesh, Srilanka

அடுத்த செய்தி