முகப்பு /செய்தி /விளையாட்டு / நியூஸி.-க்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி 65 ரன்கள் முன்னிலை…

நியூஸி.-க்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி 65 ரன்கள் முன்னிலை…

நியூசிலாந்து இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பவுலர் மேட் ஹென்றி

நியூசிலாந்து இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பவுலர் மேட் ஹென்றி

எஞ்செலா மேத்யூஸ் 20 ரன்னுடனும், பிரபாத் ஜெயசூரியா 2 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் 2ஆவது இன்னிங்ஸில் இலங்கை அணி 65 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி, கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுத்தி பந்து வீச்சை முதலில் தேர்வுசெய்தார்.

இதையடுத்து இலங்கை அணி வீரர்கள் பேட்டிங் செய்யத் தொடங்கினர். கேப்டன் கருணாரத்னே 50 ரன்களும், குசால் மெண்டிஸ் 87 ரன்களும் எடுத்தனர். ஏஞ்செலோ மேத்யூஸ் 47 ரன்களும், தனஞ்செய டி சில்வா 46 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்ஸில் 92.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த இலங்கை அணி 355 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் கேப்டன் டிம் சவுத்தி 5 விக்கெட்டுகளையும், மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது.

தொடக்க வீரர்கள் லாதம் 67 ரன்களும், டெவோன் கான்வே 30 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். டேரில் மிட்செல் 102 ரன்கள் எடுக்க, பவுலர் மேட் ஹென்றி 72 ரன்கள் குவித்து ஆச்சர்யம் அளித்தார். 107.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 373  ரன்களை முதல் இன்னிங்ஸில் எடுத்தது. இலங்கை அணியில் அசிதா பெர்னான்டோ 4 விக்கெட்டுகளையும், லஹிரு குமாரா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 18 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி இன்றைய 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணியின் ப்ளேர் டிக்னெர் இந்த 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். எஞ்செலா மேத்யூஸ் 20 ரன்னுடனும், பிரபாத் ஜெயசூரியா 2 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். நாளை 4 ஆம் நாள் ஆட்டம் தொடர்கிறது. 2 ஆவது இன்னிங்ஸில் தற்போது வரை இலங்கை அணி 65 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

First published:

Tags: Cricket