#SLvSA | இலங்கை அணியை சொற்ப ரன்களில் சுருட்டிய தென்னாப்பிரிக்கா!

ICC World Cup 2019 | Srilanka vs SouthAfrica | இலங்கை அணியின் தொடக்கமே மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. கேப்டன் கருணரத்னே முதல் பந்திலே டக் அவுட்டாகி வெளியேறினார்.

Web Desk | news18
Updated: June 28, 2019, 6:53 PM IST
#SLvSA | இலங்கை அணியை சொற்ப ரன்களில் சுருட்டிய தென்னாப்பிரிக்கா!
SLvSA
Web Desk | news18
Updated: June 28, 2019, 6:53 PM IST
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் மோசமான பேட்டிங்கால் 203 ரன்களே சேர்த்துள்ளது.

உலகக் கோப்பை தொடரின் 35வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்ட நிலையில் இலங்கை அணிக்கு இன்றைய போட்டி முக்கியமானதாகும். இலங்கை அணி வீரர்கள் இன்றயை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.


ஆனால் இலங்கை அணியின் தொடக்கமே மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. கேப்டன் கருணரத்னே முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். இதன்பின் பெர்னான்டோ - பெரேரா ஜோடி நிதனமாக விளையாடினர்.



இந்த ஜோடியும் அதிக நேரம் நீடிக்கவில்லை. பெர்னான்டோ, பெரேரா இருவரும் 30 ரன்கள் எடுத்திருந்த போது அவுட்டாகி வெளியேறினர். பின்வரிசை வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகியதால் இலங்கை அணி ரன்குவிக்க முடியாமல் தடுமாறியது.

இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில்அனைத்து விக்கெட்களையும் இழந்து 203  ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அரையிறுதி சுற்றுக்கு இன்றைய போட்டி முக்கியத்துவமானது என்பதால் இலங்கை அணி பவுலிங்கில் மிரட்டினால் மட்டுமே தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்த முடியும்.

கிட்டத்தட்ட உலகக்கோப்பையில் லீக் சுற்றுடன் நடையைக் கட்டும் தென்னாப்பிரிக்கா அணி, இந்த போட்டியில் வெற்றி பெறுமா? அல்லது இலங்கை வெற்றி பெற உதவுமா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
First published: June 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...