இந்தியாவுடனான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இது மிக மோசமான தோல்வி என்பதால் இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் படுதோல்விக்கான காரணங்கள் குறித்து இலங்கை அணியிடம் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை கேட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை படுதோல்வியை சந்தித்துள்ளது. இது எப்படி நேர்ந்தது என்பது குறித்து அணியின் மேலாளர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிக்கையில் கேப்டன், பயிற்சியாளர், தேர்வுக்குழு தலைவர் மற்றும் அணியின் மேலாளர் ஆகியோரது கருத்துகள் இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த அறிக்கை 5 நாட்களுக்குள் அளிக்கப்பட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிறன்று திருவனந்தபுரத்தில் நடந்த இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. கோலி 166 ரன்களும், சுப்மன் கில் 116 ரன்களும் எடுக்க இந்திய அணி 5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 390 ரன்களை குவித்தது.
இதையடுத்து பேட் செய்த இலங்கை அணி 22 ஓவர்களில் அனைத்த விக்கெட்டுகளையும் இழந்து 73 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்திய அணியில் முகம்மது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், முகம்மது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்திய அணி வரலாற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் எந்த அணியும் 300 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கிடையாது. முதன்முறையாக இந்தியா இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளது. ஒருபக்கம் வரலாற்று வெற்றியை இந்திய அணி பெற்றதற்காக பாராட்டப்பட்டாலும், இன்னொரு பக்கம் படு தோல்வியடைந்த இலங்கை அணி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket