ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி20 உலககோப்பை தொடர்: ஆப்கானிஸ்தான் அணியை எளிதாக வீழ்த்திய இலங்கை அணி

டி20 உலககோப்பை தொடர்: ஆப்கானிஸ்தான் அணியை எளிதாக வீழ்த்திய இலங்கை அணி

இலங்கை அணி வெற்றி

இலங்கை அணி வெற்றி

இலங்கை பேட்ஸ்மேன் சில்வா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • international, IndiaBrisbaneBrisbaneBrisbaneBrisbane

  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 உலககோப்பை தொடரில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரண்டு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

  இன்று குரூப்-1யில் பிரிஸ்பெனில் நடைபெற்ற போட்டியில் இலங்கை -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.

  அதிகபட்சமாக அந்த அணியில் யாரும் 30 ரன்களை கூட எடுக்கவில்லை தொடக்க வீரர் குர்பஸ் 28 ரன்களும் உஸ்மான் ககானி 27 ரன்கள் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  இதையும் படிங்க: அடுத்த போட்டியில் தினேஷ் கார்த்திக் விளையாடுவாரா? பயிற்சியாளர் டிராவிட் வைத்த சஸ்பென்ஸ்!

  இதனையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி முதல் இரண்டு விக்கெட்டை விரைவாக இழந்தாலும் பொறுப்பாக விளையாடிய சில்வா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி இறுதியில் 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 148 ரன்கள் அடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Afganistan, Srilanka, T20 World Cup