Home /News /sports /

நாகின் டான்ஸ் ஆடி வங்கதேசத்தை கிண்டல் செய்த இலங்கை வீரர் கருணரத்னே!

நாகின் டான்ஸ் ஆடி வங்கதேசத்தை கிண்டல் செய்த இலங்கை வீரர் கருணரத்னே!

கருணரத்னே

கருணரத்னே

இலங்கை வீரர் கருண ரத்னே அதே நாகின் டான்ஸை ஆடி வங்கதேசத்தைக் கேலி செய்த வீடியோ வைரலாகி வருகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    நேற்று துபாயில் நடைபெற்ற வாழ்வா சாவா ஆசியக் கோப்பை டி20 போட்டியில் வங்கதேசத்தின் 184 ரன்கள் இலக்கை இலங்கை அணி வெற்றிகரமாக விரட்டி வெற்றி பெற்று, சூப்பர்-4 சுற்றுக்குத் தகுதி பெற்றது. இதனையடுத்து இலங்கை வீரர் சமிக கருணரத்னே வங்கதேச அணியை நாகின் டான்ஸ் ஆடி கிண்டல் செய்தது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

    டாஸ் வென்ற தசுன் ஷனகா முதலில் வங்கதேசத்தை பேட் செய்ய அழைத்தார். மெஹதி ஹசன் 4 ஆண்டுகளுக்குப் பிறகு டி20யில் ஆடினாலும், அதுவும் முதன் முதலில் டி20 ஆடினாலும் 26 பந்துகளில் 38 ரன்களை 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் விளாசி அசத்தல் தொடக்கம் கொடுத்தார். ஷாகிப் அல் ஹசன் பிறகு அஃபீப் ஹுசைன் 39 ரன்களை விரைவு கதியில் எடுத்தார்.

    இதையும் வாசிக்க: விராட் கோலி சூர்ய குமார் யாதவ் அரைசதம் , ஹாங்காங் அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி

    பின்னால் மஹமுதுல்லா, மொசாடெக் ஹுசைன் சிறந்த பங்களிப்புகளை வழங்க பங்களாதேஷ் 183 ரன்கள் குவித்தது. இது நல்ல ஸ்கோர்தான், எளிதில் வென்றிருக்கலாம், ஆனால் குசல் மெண்டிஸுக்கு 4 வாய்ப்புகளை அளித்தது, முதலில் அட்டகாசமாக வீசி 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் டி20-யில் ஆடும் எபாதத் ஹுசைன் பிறகு 18வது ஓவரில் 17 ரன்களை விட்டுக் கொடுத்து சொதப்பியது என்று வங்கதேசம் சரணடைந்தது.

    இலங்கை கேப்டன் ஷனகாவும் குசல் மெண்டிசும் சேர்ந்து இலங்கையை வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.  இந்த ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றதையடுத்து கேம்ராவைத் திருப்பினால் வங்கதேசம் ஒருமுறை இலங்கையை வீழ்த்தி விட்டு கிண்டலாக நாகின் டான்ஸ் ஆடி அதாவது பாம்பு டான்ஸ் ஆடியதை பகடி செய்யும் விதமாக இலங்கை வீரர் கருண ரத்னே அதே நாகின் டான்ஸை ஆடி வங்கதேசத்தைக் கேலி செய்த வீடியோ வைரலாகி வருகிறது:



    இந்த வெற்றியின் மூலம் இலங்கை சூப்பர் -4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Asia cup, Bangladesh, Cricket, Srilanka

    அடுத்த செய்தி