அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் ‘யார்க்கர் மன்னன்’ லசித் மலிங்கா அறிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான லசித் மலிங்காவுக்கு உலகம் முழுதும் ரசிகர்கள் உண்டு. அவரின் வித்தியாசமான பந்துவீச்சு ஆக்ஷன் காரணமாக அவரின் பந்து வீச்சை பலரும் ரசித்தனர். 2011ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற லசித் மலிங்கா, 2019ம் ஆண்டு 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே அவர் ஆடி வந்தார். மேலும் ஐபிஎல் போட்டிகளிலும் லசித் மலிங்கா பங்கேற்று வந்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இவர் விளையாடி வந்தார்.
இந்நிலையில் இன்று குறைந்த ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக லசித் மலிங்கா அறிவித்துள்ளார். லசித் மலிங்கா தனது அதிகாரப்பூர்வ் யூடியூப் சேனல் மூலம் ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கும், தான் ஆடி வந்த மும்பை இந்தியன்ஸ், மெல்போர்ட் ஸ்டார்ஸ் மற்றும் கெண்ட் கிரிக்கெட் கிளப் போன்ற அணி நிர்வாகங்களுக்கும், சக வீரர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
Also Read:
யோகி ஆதித்யநாத் அரசுக்கு ஆஸ்திரேலிய எம்.பி பாராட்டு!
ஓய்வு முடிவை வெளியிட்ட மலிங்கா கூறுகையில், “கடந்த 17 ஆண்டுகளில் நான் சேர்த்து வைத்த கிரிக்கெட் அனுவவம் இனி களத்தில் பயன்படாது, ஏனென்றால் நான் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.
ஆனால் விளையாட்டின் உணர்வை மேம்படுத்தும் இளைய தலைமுறையினரை நான் தொடர்ந்து ஆதரிப்பேன், விளையாட்டை விரும்பும் அனைவருடனும் நான் எப்போதும் இருப்பேன்,” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

lasith malinga
38 வயதாகும் மலிங்கா, 2014ம் ஆண்டு டி20 கோப்பையை வென்ற இலங்கை அணியின் கேப்டனாக இருந்தவர். ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருப்பவர் மலிங்கா. யார்க்கர் பந்துவீச்சில் அசாத்திய திறமை படைத்த மலிங்கா பந்துவீச வந்தாலே எதிர் முனையில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் பந்து தங்கள் கால்களை பதம் பார்த்துவிடுமோ என்ற அச்சத்துடனே இருப்பார்கள்.
இலங்கை அணிக்காக ட்84 டி 20 போட்டிகளில் விளையாடி 107 விக்கெட்களை மலிங்கா வீழ்த்தியுள்ளார். மேலும் 226 ஒரு நாள் போட்டிகளில் 338 விக்கெட்களும், 30 டெஸ்ட் போட்டிகளில் 101 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார் அவர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.