இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயணித்த விமானத்தின் எரிபொருள் தீர்ந்ததால் பரபரப்பு

இலங்கை வீரர்களுடன் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்.

  • Share this:
    இங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கை வீரர்கள் தாய்நாடு திரும்பிய போது விமானத்தில் எரிபொருள் தீர்ந்து போக இந்தியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

    இந்த ஒட்டுமொத்த சம்பவமும் இலங்கை வீரர்களிடத்தில் பீதியைக் கிளப்பியுள்ளது.

    டாக் ஸ்போர்ட்டில் மிக்கி ஆர்தர் இது பற்றி கூறும்போது, “எரிபொருள் தீர்ந்ததால் விமானத்தை அவசரமாக இந்தியாவில் தரையிறக்கினர். இந்தியாவில் இறங்கிய போது என் போனை ஆன் செய்த போது இங்கிலாந்து ஆபரேஷன்ஸ் மேனேஜர் வெய்ன் பெண்ட்லி எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அவர்தான் சூழ்நிலையை எனக்குத் தெரியப்படுத்தினார். எங்கள் அனைவருக்குமே பதற்றமான நேரமாக அது இருந்தது” என்றார்.

    Also Read: தோனியின் பிறந்தநாளில் மறைமுகமாகக் குத்திக் காட்டிய கவுதம் கம்பீர்- ரசிகர்கள் ஆவேசம்

    இங்கிலாந்தில் கோவிட்-19 வீரர்களுக்குப் பரவியதால் இலங்கை வீரர்களுக்கும் ஆர்டி-பிசிஆர் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, அதன் முடிவுகளுக்காகவும் இலங்கை வீரர்கள் பதற்றத்துடன் காத்திருக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் இந்தியாவுடனான தொடர் தொடங்கவிருப்பதால் இலங்கை அணியே பதற்றத்தில் உள்ளது.

    Also Read: ‘ஹேப்பி பர்த் டே கேப்டன் கூல் தோனி..’ - ட்விட்டரில் தெறிக்கவிடும் தோனி ஆர்மி

    ஆர்டி பிசிஆர் சோதனை முடிவுகள் வந்தவுடன் தெரியும். எனவே இதுவும் அவர்களது பதற்றத்துக்குக் காரணமாகியுள்ளது, இங்கிலாந்தில் டி20, ஒருநாள் தொடர்களை இழந்து நாடு திரும்பியுள்ளது இலங்கை அணி.

    இந்தியாவின் இளம் அணியுடன் இலங்கை டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது, இதற்கு ஷிகர் தவான் கேப்டனாக உள்ளார். ராகுல் திராவிட் பயிற்சியாளராக வழிநடத்துகிறார்.
    Published by:Muthukumar
    First published: