பொருளாதார நெருக்கடி, ஈஸ்டர் தாக்குதல்- நீதி கேட்டு இலங்கை கிரிக்கெட் வீரர் உண்ணா விரதம்
பொருளாதார நெருக்கடி, ஈஸ்டர் தாக்குதல்- நீதி கேட்டு இலங்கை கிரிக்கெட் வீரர் உண்ணா விரதம்
நீதி கேட்டு உண்ணாவிரதம் இருகும் முன்னாள் வீரர் தம்மிக பிரசாத்
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பலியானவர்களுக்காகவும், தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கும் நீதி வழங்க வலியுறுத்தி 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினார்.
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பலியானவர்களுக்காகவும், தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கும் நீதி வழங்க வலியுறுத்தி 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினார்.
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவின் செயலகத்திற்கு அருகில் அமைந்துள்ள காலி முகத்திடலில் ராஜபக்ஷ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பிரசாத் கலந்து கொண்டார்.
269 பேரைக் கொன்ற 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி அவர் இந்த போராட்டத்தை நடத்துகிறார். குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட அனைத்து அப்பாவிகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும், என்கிறார் தம்மிக பிரசாத்.
39 வயதான பிரசாத், 2006 முதல் 2015 வரை 25 டெஸ்ட் மற்றும் 24 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இரண்டு வடிவங்களிலும் முறையே 75 மற்றும் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள் மற்றும் அதன் விசாரணைகள் பலவற்றை மூடிமறைப்பதாக கத்தோலிக்க திருச்சபை இலங்கை அரசாங்கத்தை குற்றம் சாட்டி பல அரசியல் தலைப்புச் செய்திகளை ஏற்படுத்தியுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைக் கோரும் பிரச்சாரத்தில் கொழும்பு பேராயர் கர்தினல் மல்கம் ரஞ்சித் முன்னணியில் உள்ளார். அரசியல் தேவைகளுக்காக அரசாங்கம் விசாரணைகளை மூடி மறைப்பதாக அவர் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு, ஏப்ரல் 21, 2019 அன்று மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று சுற்றுலா ஹோட்டல்களில் ஒரே நேரத்தில் ஆறு தற்கொலை குண்டுவெடிப்புகளில் 269 பேர் கொல்லப்பட்டனர்.
ஒரு நபர் தனது வெடிகுண்டை வைக்காமல் நான்காவது ஹோட்டலை விட்டு வெளியேறினார், ஆனால் பின்னர் வேறு இடத்தில் தனது வெடிமருந்துகளை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டார்.
தீவிரவாத அமைப்பான ஐஎஸ் அமைப்புக்கு கு விசுவாசமாக இருப்பதாக உறுதியளித்த இரண்டு உள்ளூர் முஸ்லீம் குழுக்கள் இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டன.
இதேவேளை, கால்லே முகத்திடல் போராட்டம் ஏழாவது நாளை எட்டியுள்ள நிலையில், நாளுக்கு நாள் அதிகமான இளைஞர்கள் அதில் இணைந்துகொண்டுள்ளனர். தீவின் மோசமான பொருளாதார நெருக்கடியை கையாள்வதில் அவரது திறமையின்மைக்காக ஜனாதிபதி கோத்தபய பதவி விலக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இளைஞர்களை கால்லே முகத்திடலில் திரளுமாறு வலியுறுத்தி சமூக ஊடகங்களில் எதிர்ப்புப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. தவிர, அந்நிய செலாவணி நெருக்கடியை அரசாங்கம் தவறாகக் கையாண்டதால், அத்தியாவசியப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது என்று குற்றம் சாட்டி நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.