இலங்கை அணி ஆறுதல் வெற்றி... இறுதி வரை போராடிய இந்திய இளம் படை

India vs Srilanka

இந்திய அணிக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி போராடி வெற்றி பெற்றது.

 • Share this:
  இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட ஒரு நாள் விளையாடியது. இதில் முதல் ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும் 2-வது ஒரு நாள் போட்டியில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வென்றது.

  இதையடுத்து 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

  இந்திய வீரர்கள் இலங்கை பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்களை கொடுத்து தடுமாறினார்கள். இறுதியாக 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 225 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இந்திய அணி சார்பில் ப்ரித்திவ் ஷா 49, சஞ்சு சாம்சன் 46 மற்றும் சூர்யகுமார் யாதவ் 40 ரன்களில் அவுட்டாகினர்.

  இதையடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி நிதானமாக விளையாடியது. தொடக்க வீரர் அவிஸ்கா பெர்னான்டோ சிறப்பாக விளையாடி 76 ரன்கள் குவித்தார். இந்திய அணி இளம் வீரர்கள் குறைவான இலக்கு என்றாலும் இலங்கை அணிக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.

  இலங்கை அணி 39 ஓவர்களில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில ஆறுதல் வெற்றி பெற்றது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது.

  இதையடுத்து இந்திய - இலங்கை அணிகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை (ஜூலை 25) தொடங்க உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: