Sri Lanka vs SA | அவிஷ்கா பெர்னாண்டோ சதம்: 14 ரன்களில் வெற்றி பெற்ற இலங்கை

அவிஷ்கா பெர்னாண்டோ சத மற்றும் ஆட்ட நாயகன்.

கொழும்புவில் நேற்று நடைபெற்ற இலங்கை-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • Share this:
    கொழும்புவில் நேற்று நடைபெற்ற இலங்கை-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இலங்கை தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ 115 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 118 ரன்கள் எடுக்க இலங்கை அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 300 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது, இதன் மூலம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

    இலங்கை அணி சரித் அசலங்காவின் 62 பந்து 72 ரன்கள் இன்னிங்சினால் கடைசி 10 ஓவர்களில் 90 ரன்கள் விளாசியது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் கேசவ் மகராஜ் மிகச் சிக்கனமாக வீசி 10 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டைக் கைப்பற்றினார், ரபாடா 10 ஓவர் 66 ரன் 2 விக்கெட். அதிவேக பவுலர் நார்ட்யே 10 ஓவர்களில் 69 ரன்கள் கொடுத்தார். தப்ரைஸ் ஷம்சி 10 ஓவர் 55 ரன் 1 விக்கெட்.

    இந்த வெற்றி மூலம் உலகக்கோப்பை சூப்பர் லீக் தொடருக்கான 10 புள்ளிகளை இலங்கை பெற்றது. எந்த அணியும் இலங்கையின் 300 ரன்கள் இலக்கை இதுவரை பகலிரவு போட்டியில் விரட்டியதில்லை.

    Also Read: கோலி இன்னிங்சை ஒன்றுமில்லாமல் செய்த ஷர்துல் தாக்கூர் அதிரடி

    தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் 90 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 96 ரன்களையும் வான் டெர் டியூசன் 59 ரன்களையும் ஹென்றிக் கிளாசன் 36 ரன்களையும், தெம்பா பவுமா 38 ரன்களையும் எடுக்க 40 ஒவர்களில் தென் ஆப்பிரிக்கா 210/3 என்று கடைசி 10 ஓவர்களில் 90 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வான் டெர் டியூசன் நம்பிக்கை நட்சத்திரமாக ஸ்கோரை 260 ரன்களுக்குக் கொண்டு சென்றார்.

    ஆனால் 46வது ஓவரில் தனஞ்ஜயா பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முற்பட்டு பவுல்டு ஆனார். அத்துடன் தென் ஆப்பிரிக்கா வாய்ப்பும் பறிபோனது. கடைசி 3 ஓவர்களில் 37 ரன்கள் தேவை என்ற நிலையில் ஸ்லோயர் பந்துகள் ஃபுல் லெந்த் பந்துகளை வீசி தென் ஆப்பிரிக்காவை 286 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது இலங்கை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆட்ட நாயகனாக அவிஷ்கா பெர்னாண்டோ தேர்வு செய்யப்பட்டார்.
    Published by:Muthukumar
    First published: