முகப்பு /செய்தி /விளையாட்டு / SL vs Pak - வெற்றி இலக்கு 508 ரன்கள்- விரட்டும் முடிவில் பாகிஸ்தான்

SL vs Pak - வெற்றி இலக்கு 508 ரன்கள்- விரட்டும் முடிவில் பாகிஸ்தான்

பாபர் அசாம்

பாபர் அசாம்

காலேயில் நடைபெறும் பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான இன்று பாகிஸ்தானுக்கு இலங்கை 508 ரன்கள் இலக்கை நிர்ணயிக்க பாகிஸ்தான் 89/1 என்று இன்றைய தினத்தை முடித்துள்ளது, ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

காலேயில் நடைபெறும் பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான இன்று பாகிஸ்தானுக்கு இலங்கை 508 ரன்கள் இலக்கை நிர்ணயிக்க பாகிஸ்தான் 89/1 என்று இன்றைய தினத்தை முடித்துள்ளது, ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் 342 ரன்கள் வெற்றி இலக்கை அனாயசமாக விரட்டிய பாகிஸ்தானுக்கு நாளை 5ம் நாள் இன்னும் 419 ரன்கள் தேவைப்படுகிறது. பாபர் அசாம் 38 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 26 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருக்க, இன்னொரு முனையில் இமாம் உல் ஹக் 46 நாட் அவுட்.

முன்னதாக இலங்கை அணி தன் 2வது இன்னிங்சை 176/5 என்று இன்று தொடங்கி ஸ்பின் ஆல்ரவுண்டர் தனஞ்ஜெய டிசில்வாவின் அபாரமான சதத்தின் மூலம் 360/8 என்று டிக்ளேர் செய்தது. கேப்டன் திமுத் கருண ரத்னே 61 ரன்கள் எடுக்க, கடைசியில் ரமேஷ் மெண்டிஸ் இறங்கி 54 பந்துகளி 45 ரன்களை 5 பவுண்டரிகளுடன் துரித கதியில் எடுத்தனர்.

விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் மோசமாக கீப் செய்தார், மொத்தம் 22 எக்ஸ்ட்ராக்களில் அவர் 13 பைகளை விட்டார்.பாகிஸ்தான் அணியில் நசீம் ஷா, முகமது நவாஸ் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்ற, யாசிர் ஷா, நவ்மன் அலி, அகா சல்மான் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இன்று ஸ்கோர் 243 ஆக இருந்த போது திமுத் கருண ரத்னே, நவ்மன் அலி பந்தில் ஷார்ட் லெக்கில் ஆசாத் ஷபீக்கின் அபாரமான ரிப்ளெக்ஸ் கேட்சுக்கு வெளியேறினார். வெல்லலகே 18 ரன்களில் நவாஸிடம் காலியானார். அதன் பிறகு 82 ரன்களை தனஞ்ஜெய டிசில்வாவும் (109), ரமேஷ் மெண்டிஸும் (45) சேர்த்தனர்.

தனஞ்ஜயா சதம் எடுத்து 109 ரன்களில் ரன் அவுட் ஆனவுடன் 360/8 என்று டிக்ளேர் செய்தது இலங்கை. இதனையடுத்து பாகிஸ்தான் களமிறங்கியது. 51 ரன்களில் 3 பவுண்டரிகளுடன் 16 எடுத்திருந்த பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபீக் இறங்கி வந்து அடிக்கிறென் என்று தேவையில்லாமல் ஜெயசூரியாவிடம் மிட் ஆஃபில் கேட்ச் ஆகி வெளியேறினார். ஆட்டம் இன்று நிறுத்தப்பட்ட போது பாகிஸ்தான் 89/1. வெற்றிக்கு 419 ரன்கள் தேவை..

ட்ரா செய்தால் தொடரை பாகிஸ்தான் வென்று விடும், எனவே இலக்கை நோக்கி பயணித்தால் ட்ராவையாவது சாத்தியமாக்கலாம், சொதப்பினால் இலங்கை தொடரை சமன் செய்து விடும்.

First published:

Tags: Babar Azam, Pakistan cricket, Sri Lanka