Home /News /sports /

அதிர்ஷ்டம் இல்லாத சண்டிமால்; பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்கு 342 ரன்கள்- இன்றும் சேர்த்து  2 நாட்கள் உள்ளன

அதிர்ஷ்டம் இல்லாத சண்டிமால்; பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்கு 342 ரன்கள்- இன்றும் சேர்த்து  2 நாட்கள் உள்ளன

சண்டிமால் 94 நாட் அவுட்.

சண்டிமால் 94 நாட் அவுட்.

காலே டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 342 ரன்களை நிர்ணயித்துள்ளது இலங்கை. இன்று 4ம் நாள் இலங்கை தன் 2வது இன்னிங்சில் 329/8 என்று தொடங்கி 337 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தினேஷ் சண்டிமால் 94 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், சத வாய்ப்பு கிடைப்பதற்குள் எதிர்முனையில் இருந்த பிரபத் ஜெயசூரியா நசீம் ஷா பந்தில் பவுல்டு ஆக, இலங்கை இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

மேலும் படிக்கவும் ...

    சண்டிமால் 139 பந்துகளைச் சந்தித்து 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 94 நாட் அவுட்டில் முடிந்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் 5 விக்கெட்டுகள். யாசீர் ஷா 3 விக்கெட்.

    342 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆடி வரும் பாகிஸ்தான் நன்றாகத் தொடங்கியுள்ளது. அந்த அணி 46 ரன்கள் எடுத்து விக்கெட் எதையும் பறிகொடுக்காமல் ஆடி வருகிறது.

    தொடக்க ஆட்டக்காரர்கள் இமாம் உல் ஹக் 2 பவுண்டரிகளுடன் 21 ரன்களுடனும், அப்துல்லா ஷபீக் பவுண்டரிகளுடன் 25 ரன்களுடனும் ஆடிவருகின்றனர்.

    சண்டிமால் இதற்கு முன் 90+ ரன்களில் சதமெடுக்காமல் அவுட் ஆனதோ, நாட் அவுட் ஆக இருந்ததோ இல்லை, இதுதான் முதல் முறை. பிட்ச் விளையாட முடியாமல் இல்லை, பாகிஸ்தான் பேட்டர்கள் தங்களை அப்ளை செய்து கொண்டால் இலக்கை விரட்டலாம், பாபர் அசாம் முதல் இன்னிங்சில் தனிமனிதனாகப் போராடி 119 ரன்கள் எடுத்தார்.

    இந்த இன்னிங்சில் ஒரு நல்ல தொடக்கம் கொடுத்து விட்டால் மீதியை அவர் பார்த்துக் கொள்வார் என்று நம்பலாம்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Pakistan cricket, Sri Lanka, Test match

    அடுத்த செய்தி