முகப்பு /செய்தி /விளையாட்டு / SL vs PAK-அப்துல்லா ஷபிக் சதம்; பாபர் அசாம் அவுட்- பாகிஸ்தான் வெற்றி பெற 120 ரன்களே தேவை

SL vs PAK-அப்துல்லா ஷபிக் சதம்; பாபர் அசாம் அவுட்- பாகிஸ்தான் வெற்றி பெற 120 ரன்களே தேவை

ஷபீக் சதம், பாக்.வெற்றிக்குத் தேவை 120 ரன்கள்

ஷபீக் சதம், பாக்.வெற்றிக்குத் தேவை 120 ரன்கள்

கால்லே டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு இலங்கை அணி 342 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயிக்க பாகிஸ்தான் அணி 3ம் நாளான இன்று 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் தொடக்க வீரர் அப்துல்லா ஷபீக் 112 ரன்கள் எடுத்தும், ரிஸ்வான் 7 ரன்கள் எடுத்தும் களத்தில் நிற்க பாகிஸ்தான் வெற்றிக்கு இன்னும் தேவை 120 ரன்களே.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கால்லே டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு இலங்கை அணி 342 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயிக்க பாகிஸ்தான் அணி 3ம் நாளான இன்று 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் தொடக்க வீரர் அப்துல்லா ஷபீக் 112 ரன்கள் எடுத்தும், ரிஸ்வான் 7 ரன்கள் எடுத்தும் களத்தில் நிற்க பாகிஸ்தான் வெற்றிக்கு இன்னும் தேவை 120 ரன்களே.

இன்று காலை இலங்கை அணி 4 ஒவர்கள் மட்டுமே ஆட முடிந்தது, இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர் 337 ஆக இருக்கும் போது அந்த அணியின் ஜெயசூரியா ஆட்டமிழக்க சண்டிமால் 94 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து சத வாய்ப்பை இழந்தார்.

அடுத்ததாகக் களமிறங்கிய பாகிஸ்தான் அணி அபாரமான தொடக்கம் கண்டது, பிட்சில் எந்த வித பேயோ பிசாசோ இல்லை. ஒருமுனையில் லெக் ஸ்டம்புக்கு வெளியே ஒரு ஸ்பாட் உள்ளது, நல்ல லெக் ஸ்பின்னர் இருந்தால் பாகிஸ்தான் காலியாகியிருக்கும். ஆனால் இடது கை ஆஃப் ஸ்பின்னர் அந்த ஸ்பாட்டை பயன்படுத்துவது கொஞ்சம் கடினம், அவர் ஓவர் த விக்கெட்டில் வீச வேண்டும் அது எல்லா பந்துகளும் அந்த ஸ்பாட்டில் விழும் என்று சொல்ல முடியாது, ஒருவேளை லெக் ஸ்பின்னர் இருந்தால் அந்த ஸ்பாட் வேலை செய்யும், நேற்று குசல் மெண்டிஸை அந்த ஸ்பாட்டில் குத்திதான் பால் ஆஃப் த செஞ்சுரி போல் பவுல்டு செய்தார் யாசீர் ஷா.

இன்று பாபர் அசாம் 104 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸ் என்று அனாயசமாக ஆடிக்கொண்டிருந்த போது ஜெயசூரியா அந்த ஒரு பந்தை ஃபுல் லெந்தில் லெக் ஸ்டம்புக்கு வெளியே குத்தினார், பாபர் அசாம் பந்தை தவிர்க்க முயன்றார். ஆனால் பந்து திரும்பி லெக் ஸ்டம்பைப் பெயர்த்தது, இந்த விக்கெட் இலங்கைக்கு முடியும் தறுவாயில் பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

ஆனால் அப்துல்லா ஷபீக் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஆடி தன் 2வது சதத்தை எடுத்தார். அவரது 6 டெஸ்ட்களி 659 ரன்களை எடுத்து சராசரி 70ஐக் கடந்து விட்டது. இவர் 112 ரன்களுடனும், ரிஸ்வான் 7 நாட் அவுட், 4ம் நாளை பாகிஸ்தான் 222/3 என்று 342 இலக்கை நோக்கி வெற்றி நடை போடுகிறது, வெற்றி பெற இன்னும் 120 ரன்களே தேவை, நாளை ஒரு பெரிய கொலாப்ஸ் ஆனால்தான் இலங்கை ஜெயிக்க முடியும், ஆனால் பாகிஸ்தான் அணி ஒரு தீர்மானிக்க முடியாத அணி, எங்கிருந்து வேண்டுமானாலும் வெற்றி பெறும் எங்கிருந்து வேண்டுமானாலும் தோற்கும்.

முன்னதாக பாகிஸ்தான் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 35 ரன்கள் எடுக்க இவரும் ஷபீக்கும் முதல் விக்கெட்டுக்காக 87 ரன்களைச் சேர்த்ததுதான் பாகிஸ்தான் இப்போது வலுவாக இருக்கக் காரணம். கடைசியில் பாபர் அசாம் அவுட் ஆனது இலங்கைக்கு லேசான நம்பிக்கையை அளித்துள்ளது, நாளை 5ம் நாள் ஆட்டம் இன்னும் சுவாரஸியமாக இருக்கும்.

First published:

Tags: Babar Azam, Pakistan cricket, Sri Lanka, Test match