Sri Lanka vs India | 20 வீரர்களில் 14 வீரர்கள் இந்திய சீனியர் அணிக்கு ஆடியவர்கள்: ரணதுங்காவுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியமே பதிலடி

திராவிட், தவான்.

இலங்கை தொடருக்கு இந்தியா இரண்டாம் தர அணியை அனுப்பியுள்ளது, இது நம் கிரிக்கெட்டுக்கு நிகழ்ந்த அவமானம் என்று முன்னாள் இலங்கை கேப்டன் ரணதுங்கா கூறுவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியமே பதிலடி கொடுத்துள்ளது.

  • Share this:
    இலங்கை தொடருக்கு இந்தியா இரண்டாம் தர அணியை அனுப்பியுள்ளது, இது நம் கிரிக்கெட்டுக்கு நிகழ்ந்த அவமானம் என்று முன்னாள் இலங்கை கேப்டன் ரணதுங்கா கூறுவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியமே பதிலடி கொடுத்துள்ளது.

    தொலைக்காட்சி மார்க்கெட்டிங் வருமானம் போன்ற பண விஷயங்களுக்காக இந்தியா எந்த அணியை அனுப்பினாலும் விளையாடத் தயார் என்ற இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மனநிலையை அர்ஜுனா ரணத்துங்கா சாடினார்.

    இதற்குப் பதிலடி கொடுத்துள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், “இங்கு வந்துள்ள இந்திய அணியின் 20 வீரர்களில் 14 பேர் இந்திய அணிக்காக 3 வடிவங்களிலும் ஏற்கெனவே ஆடியவர்கள். ஆகவே இது இரண்டாம் தர அணி அல்ல” என்று பதில் கொடுத்துள்ளது.

    Related: இரண்டாம் தர இந்திய அணியை அனுப்பியது நம் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட அவமானம் : அர்ஜுனா ரணதுங்கா காட்டம்

    மேலும் இலங்கை வாரியம் கூறும்போது இப்போதெல்லாம் கிரிக்கெட்டில் 3 வடிவங்களிலும் போட்டிகள் நடைபெறுவதால் ஒவ்வொரு வடிவத்துக்கும் ஒவ்வொரு அணி என்பதை பல நாடுகளும் கடைப்பிடித்து வருகின்றன, இதில் இரண்டாம் தரம், முதல் தரம் என்பதெல்லாம் ஆட்டத்தைப் பொறுத்ததே என்று கூறியுள்ளது, என்று கூறியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால் ரணதுங்கா கூறியதில் ஒரு சிறு உண்மை உள்ளது, டெலிவிஷன் மார்க்கெட்டிங் என்ற அந்த விஷயத்தை மறுக்க முடியாது. இன்னொரு கேள்வியும் எழுகிறது இதே போல் ஒரு அனுபவமற்ற அணியை மற்ற நாடுகள் அனுப்பினால் பிசிசிஐ ஏற்குமா என்பதே அது.

    ஆனால் இந்தியா இப்படி ஒரு டீமை அனுப்புவது முதல் முறையல்ல, ஜிம்பாப்வேவுக்கு இருமுறை முற்றிலும் வேறுபட்ட அணியை இந்தியா அனுப்பியுள்ளது. ரணதுங்காவின் கருத்தில் உள்ள பிழை என்னவெனில் இந்த இந்திய அணி பலவீனமான அணி கிடையாது இன்னும் சொல்லப்போனால், சீனியர் அணியை விடவும் சுவாரசிமானது என்பதே. கோலியின் அங்க சேஷ்டைகள் இல்லாத ஒரு தொடரையாவது வித்தியாசமான கேப்டன்சியில் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது என்பதுதான் முக்கியம்.

    இந்த இந்திய அணியில் 6 வீரர்கள் தான் இந்திய அணிக்கு ஆடாதவர்கள்.
    Published by:Muthukumar
    First published: