Sri Lanka vs Bangladesh-என்னை பிராட்மேனுடன் ஒப்பிடுகிறார்கள்: முஷ்பிகுர் ரஹீமின் ஒளிவுமறைவில்லா தற்பெருமை
Sri Lanka vs Bangladesh-என்னை பிராட்மேனுடன் ஒப்பிடுகிறார்கள்: முஷ்பிகுர் ரஹீமின் ஒளிவுமறைவில்லா தற்பெருமை
முஷ்பிகுர் ரஹீம்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 5,000 டெஸ்ட் ரன்களை எடுத்த வங்கதேச முதல் பேட்டர் ஆனதன் பெருமிதங்களை, தற்பெருமைகளை எந்த வித தன்னடக்கம் காரணமாகவும் முஷ்பிகுர் ரஹிம் மறைத்துக் கொள்ள விரும்பவில்லை. வங்கதேச ரசிகர்கள் தன்னை ஆஸ்திரேலிய கிரேட் டான் பிராட்மேனுடன் ஒப்பிடுவதாக பெருமை பேசியுள்ளார்.

நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் ட்ரா ஆனது. இதில் முஷ்பிகுர் ரஹிம் 105 ரன்களை எடுத்து சதம் கண்டார். ஆனால் ஆட்டம் டிரா ஆனது. இந்நிலையில் தன் சாதனை குறித்து அவர் போலி தன்னடக்கங்களையெல்லாம் காண்பிப்பதில்லை, வெளிப்படையாக தன் சாதனைகளைக் கொண்டாடுகிறார்.
அவர் கூறியதாவது:
பங்களாதேஷில் மட்டும்தான், என்னை சிலர் பிராட்மேனுடன் ஒப்பிடுகிறார்கள். அதுவும் நான் சதமெடுத்தால் பிராட்மேனுடன் ஒப்பிடுகிறார்கள், எனவேதான் நான் சரியாக ஆடாமல் சொதப்பினால் எனக்கான குழியை நானே தோண்டிக்கொள்வது போல் தோன்றுகிறது. நான் மூத்த வீரர்களில் ஒருவன் இன்னும் சில காலம் தான் ஆடமுடியும்.
இளம் வீரர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். எனவே களத்துக்கு வெளியே நான் இத்தகைய பிரச்சனைகளைச் சந்திக்கும் போது களத்தில் என்னுடைய பங்களிப்பு பாதிக்கின்றது. 5,000 டெஸ்ட் ரன்களை கடந்த முதல் வங்கதேச வீரர் என்பதை பெருமையாக உணர்கிறேன். ஆனால் நான் கடைசி வீரர் இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். 8,000 அல்லது 10,000 ரன்களை எட்டக்கூடிய பல திறமையான வீரர்கள் எங்கள் சீனியர்கள் மற்றும் ஜூனியர்களில் இருப்பார்கள்,"
நான் முதல் டெஸ்ட்டை ஆடும் போது என் லட்சியம் 2வது டெஸ்ட் போட்டியை ஆட வேண்டும் என்பதாகவே இருந்தது. விக்கெட் கீப்பர் -பேட்டர் என்பதால் என் முன்னுரிமை டெஸ்ட் போட்டிகளுக்குத்தான், எத்தனை சதங்கள் இதில் எடுக்கிறோம் என்பதில்தான் நம் பெருமை அடங்கியிருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் நீண்ட காலம் ஆடி சாதிக்க வேண்டும் என்பதே லட்சியமாக இருந்தது. எனக்கு இப்போது மகிழ்ச்சியாகவே உள்ளது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.