ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

அணித்தேர்வில் கோளாறு: இலங்கையிடம் அதிர்ச்சித் தோல்வி- தொடரை இழந்தது ஆஸ்திரேலியா

அணித்தேர்வில் கோளாறு: இலங்கையிடம் அதிர்ச்சித் தோல்வி- தொடரை இழந்தது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை ஒருநாள் தொடரை வென்றது.

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை ஒருநாள் தொடரை வென்றது.

கொழும்புவில் நேற்று நடைபெற்ற 4வது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவை 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஒருநாள் தொடரை 3-1 என்று கைப்பற்றியது, இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது, அது சம்பிரதாயப் போட்டியாகவே அமையும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கொழும்புவில் நேற்று நடைபெற்ற 4வது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவை 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஒருநாள் தொடரை 3-1 என்று கைப்பற்றியது, இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது, அது சம்பிரதாயப் போட்டியாகவே அமையும்.

  டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது, இலங்கை அணி முதலில் பேட் செய்து தனஞ்ஜய டிசில்வா 60 ரன்களையும் அசலங்கா 110 ரன்களையும் எடுக்க 49 ஓவர்களில் 258 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மேத்யூ கூனிமேன், பாட் கமின்ஸ், மிட்செல் மார்ஷ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர், தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் பாவம் 99 ரன்கள் எடுத்து ஸ்டம்ப்டு ஆகி வெளியேறினார். கடைசியில் பாட் கமின்ஸ் 35 ரன்களுடன் போராடினாலும் ஆஸ்திரேலியா 254 ரன்களில் முடிந்து தொடரை இழந்தது.

  டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்த ஆஸ்திரேலியா பிரமாதமாக வீசி 3 இலங்கை விக்கெட்டுகளை 10 ஓவர்களுக்குள் சாய்த்தது. நிரோஷன் டிக்வெலாவை மேக்ஸ்வெல் 1 ரன்னில் காலி செய்தார். பிறகு 7வது ஓவரில் பாட் கமின்ஸ், அபாய வீரர் குசல் மெண்டிஸை பவுல்டு ஆக்கினார். 3வது ஒருநாள் போட்டியில் சதமெடுத்த நிசாங்காவை மிட்செல் மார்ஷ் வீழ்த்தினார். இலங்கை 35/3 என்று தடுமாறியது.

  ஆனால் அதன் பிறகு தனஞ்ஜய மற்றும் அசலங்கா மூழ்கும் கப்பலை நிலை நிறுத்தி திசை வழி செலுத்தினர், இருவரும் பவுண்டரிகளை அடித்தனர், ஆஸ்திரேலியா அட்டாக்கிலிருந்து பின் வாங்கியது. அசலங்காவிற்கு அசாத்திய லக். பாட் கமின்ஸ் பந்து ஸ்டம்பில் பட்டு பைல் விழவில்லை. முன்னதாக கூனிமேன் பந்து ஒன்றும் ஸ்டம்பில் பட்டது ஆனால் பைல் விழவில்லை.

  தனஞ்ஜயாவும் அசலங்காவும் 100 பந்தில் 100 ரன் கூட்டணி அமைத்தனர். அப்போது மிட்செல் மார்ஷ் பந்தில் தனஞ்ஜயா 60 ரன்களுக்கு மேக்ஸ்வெல்லின் அற்புத கேட்சுக்கு வெளியேறினார். அசலங்கா அரைசதம் எடுத்தாலும் கேப்டன் ஷனகாவை ரன் அவுட் செய்து விட்டார், 150/5 என்று இருந்த இலங்கை அணியை அடுத்து அசலங்காவும் வெலகேயும் மேலும் அரைசதக் கூட்டணி அமைத்து 200 ரன்களைக் கடக்கச் செய்தனர். அசலங்கா தன் முதல் சதத்தை 99 பந்தில் எடுத்தார். இவர் 48வது ஓவரில் 106 பந்தில் 110 அடித்து அவுட் ஆனார். வனிந்து ஹசரங்கா 20 பந்தில் 21 எடுக்க இலங்கை அணி 258 ரன்கள் எடுத்தது.

  ஆஸ்திரேலியா அணித் தேர்வில் பெரிய தவறை இழைத்தது, பார்ட்டைம் ஸ்பின்னர்களை வைத்து ஒப்பேற்ற நினைத்தது ஒர்க் அவுட் ஆகவில்லை, ரெகுலர் ஸ்பின்னர் ஸ்வெப்சனை உட்காரவைத்து தவறிழைத்து விட்டனர். ஜை ரிச்சர்ட்சனுக்கு பதிலாக பாட் கமின்சை கொண்டு வந்து தவறு செய்தனர். ஸ்வெப்சன் தான் ஆடியிருக்க வேண்டும்.

  வார்னர் 99, சத அதிர்ஷ்டம் இல்லை:

  ஆஸ்திரேலியா இலக்கை விரட்டிய போது கேப்டன் பிஞ்ச் டக்கில் கருண ரத்னேவிடம் எல்.பி.ஆனார். மிட்செல் மார்ஷ் இறங்கி 26 ரன்களுடன் வார்னருடன் 63 ரன்கள் சேர்த்தவரை அபாரமாக ஆடினார், ஆனால் இடது கை ஸ்பின்னர் வெலகேவிடம் வெளியேறினார் மார்ஷ். மார்னஸ் லபுஷேன், அலெக்ஸ் கேரி ஆகியோர் சுமாராகத் தொடங்கி விட்டு இருவரும் இலங்கை ஸ்பின்னர்களிடம் காலியாயினர். 5வது விக்கெட்டுக்காக ட்ராவிஸ் ஹெட் (27), வார்னர் 58 ரன்களை சேர்த்தனர்.

  டிசில்வா பந்தில் ஹெட் பவுல்டு ஆனார். மாஹிஷ் தீக்‌ஷனா மிக முக்கியமான விக்கெட்டான கிளென் மேக்ஸ்வெலை ஒரு ரன்னில் சக்சஸ்ஃபுல் ரிவியூவில் வீழ்த்தினார். வார்னர் 99 ரன்கள் எடுத்து ஒருநாள் போட்டியில் சத வறட்சியைப் போக்கலாம் என்று நினைத்த போது டிசில்வா பந்தில் ஸ்டம்ப்டு ஆனார்.

  பாட் கமின்ஸ், கிரீன் 31 ரன்கள் சேர்த்தனர், ஆனால் வாண்டர்சே கிரீனை வீழ்த்தினார். கமின்ஸ் 49வது ஓவரில் 35 ரன்களுக்கு வீழ்ந்தார், கூனிமேன் கடைசி பந்தில் அவுட் ஆகும் வரை போராடிப் பார்த்தார், ஆஸ்திரேலியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று தொடரை இழந்தது.

  5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Australia, David Warner, ODI, Sri Lanka