Home /News /sports /

ஸ்டீவ் ஸ்மித் அட்டகாச சதம்: கோலியை முந்தினார்-ஜோ ரூட் சாதனை சமன்

ஸ்டீவ் ஸ்மித் அட்டகாச சதம்: கோலியை முந்தினார்-ஜோ ரூட் சாதனை சமன்

இலங்கைக்கு எதிராக 28வது டெஸ்ட் சதத்தை எடுத்து கோலியை முந்தினார் ஸ்டீவ் ஸ்மித்

இலங்கைக்கு எதிராக 28வது டெஸ்ட் சதத்தை எடுத்து கோலியை முந்தினார் ஸ்டீவ் ஸ்மித்

கால்லே மைதானத்தில் நடைபெறும் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று முதலில் பேட் செய்து வரும் ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் சதமெடுத்தார், இது அவரது 28வது டெஸ்ட் சதமாகும் இதன் மூலம் விராட் கோலி (27) சதக் கணக்கை முந்தினார். ஜோ ரூட்டின் 28 சதங்களுடன் சமன் செய்தார் ஸ்டீவ் ஸ்மித்.

மேலும் படிக்கவும் ...
    கால்லே மைதானத்தில் நடைபெறும் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று முதலில் பேட் செய்து வரும் ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் சதமெடுத்தார், இது அவரது 28வது டெஸ்ட் சதமாகும் இதன் மூலம் விராட் கோலி (27) சதக் கணக்கை முந்தினார். ஜோ ரூட்டின் 28 சதங்களுடன் சமன் செய்தார் ஸ்டீவ் ஸ்மித்.

    கடைசியாக ஸ்டீவ் ஸ்மித் இந்தியாவுக்கு எதிராக 131 ரன்களை சிட்னியில் எடுத்ததுதான் பிறகு 7 அரைசதங்களை எடுத்தார், ஆனால் சதமாக மாற்ற முடியவில்லை, ஒருமுறை அடிலெய்டில் இங்கிலாந்துக்கு எதிராக 93இல் அவுட் ஆனார், முன்னதாக இந்தியாவுக்கு எதிராக அதே சிட்னியில் 81 ரன்களை 2வது இன்னிங்சில் எடுத்தார்.  பாகிஸ்தானுடன் 78, 72, 59 என்று அரைசதங்கள் எடுத்தாலும் சத வறட்சி நீண்டது, இப்போது வறட்சிக்கு முடிவு கட்டி 28வது சதம் எடுத்தார் ஸ்டீவ் ஸ்மித்.

    ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 109 ரன்களுடனும், அவருடன் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 16 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் இன்னொரு நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷேனும் தன் 7வது டெஸ்ட் சதத்தை எடுத்து ஆட்டமிழந்தார்.

    புதிய பந்து எடுத்த இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரஜிதா வீசிய பந்தை பிரமாதமான கவர் ட்ரைவ் மூலம் பவுண்டரிக்கு விரட்டி தன் 28வது சதத்தை எடுத்தார். ஸ்மித் ஆடும் 87வது டெஸ்ட் டெஸ்ட் ஆகும் இது. அவரது சராசரி 59.37 ஆக உள்ளது. 36 அரைசதங்களையும் எடுத்துள்ளார் ஸ்மித் அரைசதங்களை சதமாக மாற்றும் விகிதம் அதிகமாக உள்ளது.

    ஜோ ரூட் 121 டெஸ்ட்களில் 28 சதங்கள். சராசரி 50.76. 54 அரைசதங்களை எடுத்த ஜோ ரூட் 28 சதங்களை எடுத்திருப்பது கன்வர்ஷன் ரேட்டில் கொஞ்சம் பின் தங்கியுள்ளார் என்றுதான் கூற வேண்டும்.

    இந்தியாவின் மாஸ்டர் பேட்டர் விராட் கோலி 102 டெஸ்ட் போட்டிகளில் 27 சதம் எடுத்துள்ளார், அரைசதம் 28. எப்படியெனில் இவரும் அரைசதத்தை சதமாக மாற்றும் கன்வர்ஷன் ரேட்டில் பிரமாதமாக உள்ளார், ஆனால் என்ன அரைசதமே வரவர அருகி வருகிறது. சராசரி 50லிருந்து இறங்கி 49.53 ஆக உள்ளது.

    இன்று காலை டாஸ் வென்ற பாட் கமின்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். டேவிட் வார்னர் 5 ரன்களில் ரஜிதாவின் பந்து ஒன்று உள்ளே வந்து சற்றே வெளியே எடுத்து மட்டையைக் கடந்து ஆஃப் ஸ்டம்பைத் தாக்க பிரமாத டெலிவரியில் பவுல்டு ஆனார். உஸ்மான் கவாஜா 77 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்து ஆர்டிஎம் மெண்டிஸின் அற்புதமான சுழல் பந்துக்கு பவுல்டு ஆகி வெளியேறினார். ஆஸ்திரேலியா 70/2.

    பிறகு ஸ்மித், லபுஷேன் ஒன்று சேர்ந்தனர் 37 ஓவர்களில் 134 ரன்களைச் சேர்த்தனர். ஸ்கோர் 204 ஆக இருந்த போது லபுஷேன் இடது கை ஸ்பின்னர் ஜெயசூரியா பந்தில் ஸ்டம்ப்டு ஆனார், ஆனால் அதற்கு முன்னர் பிரமாதமான இன்னிங்ஸில் 12 பவுண்டரிகளுடன் 156 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். இது இவரது 7வது டெஸ்ட் சதமாகும்.

    ட்ராவிஸ் ஹெட் 12 ரன்களில் ஜெயசூரியா பந்தில் பவுல்டு ஆக கடந்த டெஸ்ட் நாயகன் கேமரூன் கிரீன் 4 ரன்களில் ஜெயசூரியாவிடம் எல்.பி.ஆனார். முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 298/5 என்று வலுவான நிலையில் உள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Australia, Sri Lanka, Steve Smith, Test cricket, Test match

    அடுத்த செய்தி