இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா நேற்று முதல் ஒருநாள் போட்டியில் பல்லக்கிலே மைதானத்தில் ஆடியது. இதில் இலங்கை முதலில் பேட் செய்து 300 ரன்கள் குவித்தது. ஆனால்
மழை காரணமாக டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஆஸ்திரேலியாவுக்கு 44 ஓவர்களில் 282 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட, மேக்ஸ்வெல் அதிரடி பினிஷிங்கில் ஆஸ்திரேலியா 42.3 ஓவர்களில் 282 ரன்கள் இலக்கை எட்டி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.
இலங்கை பிரமாதமாக ஆடியது, குணதிலக (55), பதும் நிசாங்கா (56), குசல் மெண்டிஸ் (86) என்று பிரமாதமாக ஆட, கடைசியில் ஸ்பின்னிங் ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்கா 19 பந்தில் 37 ரன்களை விளாசியதோடு ஜை ரிச்சர்ட்ஸனின் ஒரே ஓவரில் 5 பவுண்டரிகள் விளாசினார், பிறகு பவுலிங்கில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஆனாலும் ஏன் தோற்றது என்றால் மேக்ஸ்வெல்லின் பிரில்லியன்ஸ்தான் காரணம்.
மேக்ஸ்வெல் இறங்கும்போது ஆஸ்திரேலியாவுக்கு தேவை 84 பந்துகளில் 93 ரன்கள் ஆனால் விக்கெட்டுகள் இல்லை. 5 விக்கெட்டுகளே உள்ளன. பந்துகள் நன்றாகத் திரும்பும்ப்பிட்சில் உடனடியாக ஆக்ரோஷ ஆட்ட ஆயுதத்தை எடுத்தார் மேக்ஸ்வெல். இதே மைதானத்தில்தான் மேக்ஸ்வெல் 2016-ல் 49 பந்தில் டி20 மேட்சில் செஞ்சுரி அடித்தார்.
நேற்று 51 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 80 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்த மேக்ஸ்வெலின் இந்த இன்னிங்ஸ் கொஞ்சம் திட்டமிடப்பட்டதுதான் ரிவர்ஸ் ஸ்வீப்பை நன்றாக பயன்படுத்தினார். துஷ்மந்த சமீராவை 2 அபார சிக்சர்கள் மூலம் 9 பந்துகள் மீதமிருக்க ஜெயிக்க வைத்தார் கிளென் மேக்ஸ்வெல்.
இலங்கையின் அறிமுக இடது கை ஸ்பின்னர் வெலலகே 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் ஸ்டீவ் ஸ்மித் (53) விக்கெட்டும் அடங்கும். ஆனால் இவர்கள் இருவரையும் தான் மேக்ஸ்வெல் பதம் பார்த்தார். இருவரையும் 22 பந்துகளில் 38 ரன்கள் விளாசினார் மேக்ஸ்வெல். முன்னதாக சேசிங்கில் ஸ்மித் 60 பந்தில் 53, பிஞ்ச் 41 பந்தில் 41 என்று அடித்தளம் இட்டனர். நீண்ட மழை இடைவெளிக்குப் பிறகு டார்கெட் மாற்றியமைக்கப்பட்ட பின் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 31 பந்துகளில் 44 ரன்கள் வெளுத்தார். அலெக்ஸ் கேரி 21 ரன்களையும் லபுஷேன் 24 ரன்களையும் எடுத்தனர்.
மொத்தத்தில் இலங்கை நன்றாக ஆடியது, ஆனாலும் தோல்வி அடைந்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.