இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் மீது சூதாட்ட புகார் - ஐசிசி விசாரணை

இலங்கையில் மூன்று கிரிக்கெட் வீரர்கள் சூதாட்ட புகாரில் சிக்கியிருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் மீது சூதாட்ட புகார் - ஐசிசி விசாரணை
கோப்பு படம்
  • Share this:
கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் துலாஸ் அலகபெருமா, சூதாட்ட புகாரில் ஈடுபட்ட மூன்று வீரர்களிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணையை தொடங்கியிருப்பதாகக் கூறினார். விளையாட்டுத்துறையில் ஒழுக்கத்தை கடைபிடிப்பது குறைந்து வருவது கவலையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, தற்போதைய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் யாரும் சூதாட்டப் புகாரில் சிக்க வில்லை என்றும் முன்னாள் வீரர்கள் மூன்று பேரிடம் மட்டும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணை நடத்தி வருவதாகவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் விளக்கமளித்துள்ளது.

சூதாட்ட புகாரில் சிக்கிய வீரர்கள் விவரம் குறித்து அமைச்சர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.First published: June 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading