• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • குடிபோதையில் கார் ஓட்டி விபத்து... பிரபல கிரிக்கெட் அணியின் கேப்டன் கைது!

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து... பிரபல கிரிக்கெட் அணியின் கேப்டன் கைது!

திமுத் கருணாரத்னே.

திமுத் கருணாரத்னே.

#Testcaptain #DimuthKarunaratne arrested | அண்மையில் தென் ஆப்ரிக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் இவரது அதிரடியால் இலங்கை அணி தொடரை வென்று சாதனைப் படைத்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பிரபல கிரிக்கெட் அணியின் கேப்டன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

    இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே. அண்மையில் தென் ஆப்ரிக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் இவரது அதிரடியால் இலங்கை அணி தொடரை வென்று சாதனைப் படைத்தது. இதனை அடுத்து உலகக் கோப்பைக்கான இலங்கை அணிக்கு இவரை கேப்டனாக நியமிக்கலாம் என பேசப்பட்டு வருகிறது.

    Dimuth Karunaratne, திமுத் கருணாரத்னே
    இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே.


    இந்நிலையில், கருணாரத்னே இன்று அதிகாலை 5.15 மணியளவில் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கின்சி சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தார். வெரல்லா பகுதியில் வந்தபோது, ஆட்டோ ஒன்றின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் படுகாயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கருணாரத்னேவை கைது செய்தனர். அப்போது அவர் மதுக்குடித்திருப்பது தெரியவந்தது. பின்னர், கருணாரத்னே சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    #CSKvRR | சேப்பாக்கத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்? சி.எஸ்.கே அணியில் என்ன மாற்றம்?

    சி.எஸ்.கே அணியில் புதிய வீரர் சேர்ப்பு... சென்னை ரசிகர்கள் கொண்டாட்டம்!

    #IPL2019 | ‘யூனிவெர்சல் பாஸ்’ கிறிஸ் கெய்ல் புதிய வரலாற்று சாதனை!

    Also Watch...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: