இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் திடீர் ஓய்வு!

அஜந்தா மெண்டிஸ்

  • Share this:
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெனண்டிஸ் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 2008ம் ஆண்டு முதன்முதலாக இலங்கை அணிக்காக களமிறங்கிய மெண்டிஸ், 2015ல் கடைசியாக விளையாடினார். காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த 34 வயதான மெண்டிஸ் நேற்று ஓய்வை அறிவித்தார்.

மென்டிஸ் 19 டெஸ்ட்டில் 70 விக்கெட்கள், 87 ஒரு நாள் போட்டிகளில் 152 விக்கெட்கள் மற்றும் 39 டி20 போட்டிகளில் 66 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

2008 ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 6 விக்கெட்களை வீழ்த்தினார். ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 50 விக்கெட்களை வீழ்த்தியும், டி20 போட்டிகளில் 2 முறை 6 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடர் 2008ம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக விளையாடிய மெண்டிஸ் 10 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

Also Watch

Published by:Vijay R
First published: