சங்கக்காராவுக்கு எம்.சி.சி கொடுத்த மிகப்பெரிய கவுரவம்... வரலாற்று சிறப்புமிக்க முடிவுக்கு வரவேற்பு!

குமார் சங்கக்காரா. (Getty)

#SriLanka great #KumarSangakkara named new #MCCpresident | அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஓராண்டுக்கு இந்த மதிப்பு வாய்ந்த பதவியில் சங்கக்காரா இருப்பார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான குமார் சங்கக்காரா, மார்லிபோன் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக வலம் வந்தவர் குமார் சங்கக்காரா (41). அவர் இலங்கை கிரிக்கெட் அணிக்காக சுமார் 15 ஆண்டுகள் விளையாடினார்.

  ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்திலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 6-வது இடத்திலும் சங்கக்காரா இருக்கிறார்.

  இதுபோன்ற பல்வேறு சாதனைகளுக்கு உரிய அவர், இங்கிலாந்தில் உள்ள மிகவும் பிரபலமான மார்லிபோன் கிரிக்கெட் சங்கத்தின் கவுரவ உறுப்பினராக இருந்து வருகிறார்.

  Kumar Sangakkara, குமார் சங்கக்காரா
  ஒரு நாள் கிரிக்கெட்டில் குமார் சங்கக்காரா.


  இந்நிலையில், மார்லிபோன் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக சங்கக்காரா நியமிக்கப்பட்டுள்ளார். மார்லிபோன் கிரிக்கெட் சங்க வரலாற்றில் பிரிட்டிஷ் அல்லாத ஒருவர் முதல் முறையாக பிரசிடென்ட் ஆவது இதுவே முதல் முறை, அந்தப் பெருமையை ஆசியாவைச் சேர்ந்த சங்கக்காராவுக்குக் கிடைத்துள்ளது. இதுவரை 168 பேர் இதன் தலைவராக இருந்துள்ளனர்.

  அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஓராண்டுக்கு இந்த மதிப்பு வாய்ந்த பதவியில் சங்கக்காரா இருப்பார்.

  ஐ.பி.எல் தொடரில் இருந்து தோனி ஓய்வா? ரெய்னா சூசகப் பேச்சால் பரபரப்பு!

  சொன்னதை செய்து காட்டிய டேவிட் வார்னர்!

  உலகத்திலேயே தோனி தான் சிறந்த கேப்டன் - பிராவோ

  சூப்பர் ஓவர் பரபரப்பு! ஹைதராபாத்தை வீழ்த்தி ப்ளேஆஃப்க்குள் நுழைந்தது மும்பை அணி

  Also Watch...


  தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.  Published by:Murugesan L
  First published: