Home /News /sports /

ரகசிய பரிபாஷை மூலம் கள வீரர்களுக்கு ஆலோசனை: புதுசா யோசிக்கும் இலங்கைப் பயிற்சியாளர்

ரகசிய பரிபாஷை மூலம் கள வீரர்களுக்கு ஆலோசனை: புதுசா யோசிக்கும் இலங்கைப் பயிற்சியாளர்

இலங்கை அணி கிரிக்கெட் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட்

இலங்கை அணி கிரிக்கெட் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட்

இலங்கை அணி கிரிக்கெட் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தன்னுடைய புதிய யுத்தியை கிரிக்கெட்டில் பயன்படுதியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • international, IndiaSri LankaSri Lanka
கால்பந்தாட்டத்தில் பயிற்சியாளர் அல்லது மேலாளர் என்பவர் களத்திற்கு வெளியே ஓரமாக உட்கார்ந்து கொண்டு அவரும் வீரர்களுக்கு ஈடாக விங்கில் ஓடி ஓடி அங்கங்கே வீரர்களுக்கு ஆலோசனை வழங்குவதை பார்த்திருப்போம், ஆனால் கிரிக்கெட்டில் இது சாத்தியமல்ல, எனவே இலங்கை பயிற்சியாளர் புதிய முறையைக் கண்டுப்பிடித்துள்ளார். 

இதனை வங்கதேசத்துக்கு எதிரான ஆசியக் கோப்பை ஆட்டத்தில் அவர் பயன்படுத்தியது வங்கதேசத்தின் அதிருப்தியையும் கண்டனங்களையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. முந்தைய ஆட்டங்களிலெல்லாம் களத்தில் இருக்கும் வீரர்களுக்கு தண்ணீர் கொடுப்பது போலவோ, அல்லது வேறு கிளவ், போன்றவற்றை வீரர்களுக்கு கொடுத்தனுப்புமாறு அணி நிர்வாகம் ஆலோசனைகளை வழங்கி வரும்.

இப்போது ஓவர் ரேட் பிரச்சனையெல்லாம் வந்துவிட்டதால் பழைய பாணியெல்லாம் மலையேறிவிட்டது. இலங்கை அணியின் பயிற்சியாளரான இங்கிலாந்தின் கிறிஸ் சில்வர் உட்,  ஒரு காகிதத்தில் ஆங்கில எழுத்தையும் இன்னொரு காகிதத்தில் எண்ணையும் எழுதி வைப்பார், இதைப் பார்க்கும் இலங்கை கேப்டனுக்கு இந்த பரிபாஷை புரியும் இதன் மூலம் அவர் களவியூகத்தையோ, பந்து வீச்சு மாற்றத்தையோ கொண்டு வருவார்.

தற்போது, கிறிஸ் சில்வர்வுட் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படுகிறார். இதனால் தன்னுடைய யுத்தியை இலங்கை அணிக்காகவும் அவர் நடைமுறைப்படுத்தினார். வங்கதேசம் பேட்டிங் செய்யும் போது 2 D என்று தனித் தனி பேப்பரில் காண்பிக்கப்பட்டது. இதன் அர்த்தம் என்ன என்று ரசிகர்களும் யோசித்தனர்.

Also Read : 'விரைவில் ரோஹித் சர்மா கேப்டன்சியிலிருந்து அகற்றப்படுவார்' - பாகிஸ்தான் வீரர் கருத்து

2 பீல்ட்ர்களை டீப்பில் நிறுத்து என்று அர்த்தமா, அல்லது பேட்ஸ்மெனை ட்ரைவ் ஆட வைத்து அந்த இடத்தில் பீல்டரை நிறுத்து என்று அர்த்தமா என்று பலரும் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கின்றனர். இனி இந்த யுத்தி பரவலாகும் என்று எதிர்பார்க்கலாம்.

 
Published by:Vijay R
First published:

Tags: Cricket, Cricket match, Srilanka

அடுத்த செய்தி