இலங்கை குண்டுவெடிப்பு... கிரிக்கெட் தொடர் ரத்து!

இலங்கை-பாகிஸ்தான்

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணியினர் ஏப்ரல் 30-ம் தேதி கொழும்பு செல்ல இருந்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதை அடுத்து பாகிஸ்தான்-இலங்கை அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டடுள்ளது.

    19 வயதுக்குட்பட்டோருக்கான பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. முதல் போட்டி மே 3-ம் தேதி நடைபெறவிருந்தது. இதற்காக பாகிஸ்தான் அணியினர் ஏப்ரல் 30-ம் தேதி கொழும்பு செல்ல இருந்தனர்.

    இந்நிலையில் இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள் நடைபெற்றுவருவதால் அங்கு நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    போட்டி ரத்து குறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ‘ இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தால் வீரர்களின் பாதுகாப்பு கருதி போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. போட்டியை எப்போது வைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து இரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஜூன் மாதம் தென் ஆப்பிரிக்க - பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ள நிலையில் அதற்கு முன்னதாக போட்டியை வைக்க முடியுமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளது.

    Also watch

    Published by:Prabhu Venkat
    First published: