Home /News /sports /

வாய்ப்பு கிடைத்தும் ரன்-அவுட் செய்யாத வீரருக்கு குவியும் பாராட்டு - வைரல் வீடியோ

வாய்ப்பு கிடைத்தும் ரன்-அவுட் செய்யாத வீரருக்கு குவியும் பாராட்டு - வைரல் வீடியோ

எதிரணி வீரரை ரன்-அவுட் செய்யும் வாய்ப்பு கிடைத்தும் ரன் அவுட் செய்யாமல் அனைவரது இதயங்களையம் கவர்ந்துள்ளார் இலங்கை வீரர் உதனா.

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரில் பார்ல் ராக்ஸ் - நெல்சன் மண்டேலா பே ஜெயன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய பார்ல் ராக்ஸ் அணி 20 ஒவர்கள் முடிவில் 168 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கி நெல்சன் மண்டேலா அணி இலக்கை விரட்ட தொடங்கியது. 8 பந்துகளுக்கு 24 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இலங்கை வீரர் உதனா பந்துவீசி கொண்டிருந்தார்.

அப்போது உதனா வீசிய பந்தை மண்டேலா வீரர் குன் அடித்தார். அது சகவீரர் மரியாஸ் கையில் பலமாக தாக்கியது. மரியாஸ் தாக்கிய பந்தை எடுத்த உதனா ரன் அவுட் செய்ய முயன்றார். அப்போது வலியால் துடித்து கொண்டிருந்த மரியாஸ் கிரிஸை விட்டு நீண்ட தூரம் நின்றார். உதனா எளிதாக ரன் அவுட் செய்யலாம் என்றாலும் பந்து பட்டு வலியால் துடித்த வீரரை ரன் அவுட் செய்யாமல் இருந்தார்.



உதானாவின் இந்த செயல் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்த தொடரில் பார்ல் ராக்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி 27 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது.
Published by:Vijay R
First published:

Tags: Cricket

அடுத்த செய்தி