2015-க்கு பின் சொந்த மண்ணில் தொடரை வென்ற இலங்கை அணி!

SLvBAN

விக்கெட் கீப்பர் ரஹீம் மட்டும் சிறப்பாக விளையாடி 98 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
வங்கதேச அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியை வென்றதன் மூலம் சொந்த மண்ணில் 2015-க்கு பின் தற்போது தான் இலங்கை அணி தொடரை வென்றுள்ளது.

இலங்கை சென்றுள்ள வங்கதேச அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று முன்னிலையில் இருந்தது.

இதையடுத்து இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 8 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் ரஹீம் மட்டும் சிறப்பாக விளையாடி 98 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கிய இலங்கை அணி, வங்கதேச அணியின் பந்துவீச்சைத் துவம்சம் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய பெர்னான்டோ 75 பந்துகளில் 82 ரன்கள் குவித்து இலங்கை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இலங்கை 44.4 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் வங்கதேச அணிக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியது. இலங்கை அணி கடைசியாக 2015-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிான ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது. அதன் பின் தற்போது தான் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
Published by:Vijay R
First published: