Home /News /sports /

4 ஆண்டுகளாக அணியில் இல்லாதவர் கேப்டன்: உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

4 ஆண்டுகளாக அணியில் இல்லாதவர் கேப்டன்: உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு. (ICC)

உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு. (ICC)

#SriLanka announce 15-man squad for #ICC #WorldCup2019 | இலங்கை அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

  • News18
  • Last Updated :
    சர்வதேச ஒரு நாள் போட்டிக்கான அணியில் 4 ஆண்டுகளாக இடம்பெறாத கருணாரத்னே தலைமையிலான உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    12-வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடருக்காக, முதன் முதலில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.

    சில நாட்களுக்கு முன்பு, விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் 2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இளம் ஆல் ரவுண்டர் விஜய் சங்கர், மூத்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    india-team
    உலகக்கோப்பைக்கான இந்திய அணி.


    இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை கேப்டனாக செயல்பட்ட தினேஷ் சண்டிமால், நிரோசன் டிக்வெல்லா, அகிலா தனஞ்சயா, தனுஷா குனதிலகா, உபுல் தரங்கா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    கடைசியாக கடந்த 2015-ல் இலங்கை அணிக்காக ஒரு நாள் போட்டியில் பங்கேற்ற திமுத் கருணரத்னே கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இலங்கை அணி விபரம்:



    திமுத் கருணரத்னே (கேப்டன்), லசித் மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், திசாரா பெரேரா, குசல் பெரேரா, தனஞ்சயா டி சில்வா, குசல் மெண்டிஸ், இஸ்ரூ உதனா, மிலிண்டா ஸ்ரீவர்தனா, அவிஸ்கா ஃபெர்னாண்டோ, ஜீவன் மெண்டிஸ், லஹிரு திரிமன்னே, ஜெஃப்ரே வாண்டர்சே, நுவன் பிரதீப், சுரங்கா லக்மல்.

    சி.எஸ்.கேவை துரத்தும் ‘நோ-பால்’ சர்ச்சை... அம்பயரின் முடிவால் ரசிகர்கள் கோபம்!

    தல தோனி எப்போது அணிக்கு திரும்புவார்? ரெய்னாவின் பதிலால் ரசிகர்கள் உற்சாகம்!

    காலையிலேயே ஓட்டுப்போட்ட கிரிக்கெட் பிரபலம்... ரசிகர்களுக்கு முன்னுதாரணம்!

    தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு... தோல்விக்குப் பிறகு மைதானத்துக்கு வந்த தோனி!

    ஜானி பேர்ஸ்டோ, வார்னர் அதிரடி! சென்னையை எளிதாக வீழ்த்திய ஹைதராபாத் அணி

    ஐபிஎல் போட்டியிலிருந்து தோனி விலகியதற்கு இதுதான் காரணமா?

    ஹைதராபாத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் தோனி இல்லை.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

    ஹைதராபாத் மைதானத்தில் சி.எஸ்.கே கொடி, தோனி படத்துக்கு அனுமதி மறுப்பு: ரசிகர்கள் குமுறல்!

    தோனி இருக்கும்போது எனக்கு என்ன வேலை? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்!








    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














    விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Published by:Murugesan L
    First published:

    Tags: Cricket, Dinesh Chandimal, Hockey World Cup 2018, ICC world cup, Lasith Malinga, Sri Lanka

    அடுத்த செய்தி