• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் திசரா பெரேரா கிரிக்கெட்டியில் இருந்து ஓய்வு!

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் திசரா பெரேரா கிரிக்கெட்டியில் இருந்து ஓய்வு!

திசரா பெரேரா,

திசரா பெரேரா,

2013ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான போட்டியில் ராபின் பீட்டர்சனின் ஒரே ஓவரில் 35 ரன்கள் எடுத்தார் பெரேரா.

  • Share this:
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஆல் ரவுண்டருமான திசரா பெரேரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு வயது 32.

இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள திசரா பெரேரா ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்துள்ளார்.

ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள திசரா பெரேரா இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “7 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவும், 2014ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டி 20 உலகக் கோப்பை வெற்றியில் பங்களிக்கும் உறுப்பினராகவும் இருக்க முடிந்தது என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 2014 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சங்கக்கராவுடன் இணைந்து வெற்றிக்குரிய பவுண்டரியை பெரேரா அடித்து இலங்கை கோப்பை வெல்வதில் துணையாக இருந்தார்.

இலங்கை அணிக்காக கொல்கத்தாவில் இந்தியாவிற்கு எதிராக டிசம்பர் 2009-ல் ஒரு நாள் போட்டியில் அறிமுகமானவர் திசரா பெரேரா. இடது கை பேட்ஸ்மேனாகவும், வலது கை மிதவேகப் பந்து வீச்சாளராகவும் பெரேரா விளங்குகிறார். இலங்கை அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளிலும், 166 ஒரு நாள் போட்டிகளிலும், 84 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

2013ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான போட்டியில் ராபின் பீட்டர்சனின் ஒரே ஓவரில் 35 ரன்கள் எடுத்தார் பெரேரா. இதுவரை ஒரு நாள் போட்டிகளில் ஒரு ஓவரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களில் 2வது அதிகபட்சமாக அது தற்போதும் தொடருகிறது. அதே போல டி20 மற்றும் ஒரு நாள் என இரண்டு வகை போட்டிகளிலும் ஹாட்ரிக் சாதனை படைத்த சாதனையை பிரெட் லீயுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: