சி.எஸ்.கே அணியை எனக்கு பிடிக்காது.... காரணம் இதுதான்...! ஸ்ரீசாந்த் சர்ச்சை பதில்

சி.எஸ்.கே அணியை எனக்கு பிடிக்காது.... காரணம் இதுதான்...! ஸ்ரீசாந்த் சர்ச்சை பதில்
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்
  • News18 Tamil
  • Last Updated: September 30, 2019, 4:10 PM IST
  • Share this:
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தனக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பிடிக்காது என்றும் அதற்கு ஒரு சர்ச்சையான காரணத்தையும் கூறியுள்ளார்.

ஐபிஎல் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. ராஜஸ்தான் அணியில் விளையாடி வந்த ஸ்ரீசாந்த கிரிக்கெட் சூதாட்டில் ஈடுப்பட்டதாக கூறி கைது செய்யப்படடார்.

இதனால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட அவருக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டது. தற்போது 36 வயதாகும் ஸ்ரீசாந்த மீண்டும் இந்திய அணியில் விளையாட விருப்பம் தெரிவித்து வருகிறார்.


ஸ்ரீசராந்த் சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பல சர்ச்சையான பதில்களை தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த பேடி அப்டன் சுயசரிதை புத்தகம் எழுதி உள்ளார். அதில், டிராவிட் தலைமையில் ஸ்ரீசாந்த் ஆடினார். அப்போது சி.எஸ்.கே அணிக்கு எதிரான போட்டியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. இதை தெரிந்த ஸ்ரீசாந்த் என்னையும், கேப்டன் டிராவிட்டையும் திட்டியதாக பேடி அப்டன் கூறியுள்ளார்.

ஸ்ரீசாந்த் மேட்ச் பிக்சிங் செய்யும் நோக்கத்தில் தான் இவ்வாறு நடந்து கொண்டதாக  பேடி அப்டன் கூறி இருந்தார். இதனை பேட்டியின் போது மறுத்த ஸ்ரீசாந்த், எனக்கு சி.எஸ்.கே அணியை பிடிக்காது. அதற்காகத்தான் அந்த அணிக்கு எதிராக களமிறங்க நான் துடிப்புடன் இருந்தேன். சி.எஸ்.கே அணியை எனக்கு பிடிக்காமல் போனதற்கு அந்த அணியின் கேப்டன் தோனி அல்லது உரிமையாளர் சீனிவாசன் காரணம் என பலரும் நினைக்கலாம்.

ஆனால் உண்மை அது அல்ல. எனக்கு மஞ்சள் நிறம் என்றால் பிடிக்காது. இதன் காரமணாக தான் எனக்கு ஆஸ்திரேலிய அணியை பிடிக்காமல் போனது என்றுள்ளார் ஸ்ரீசாந்த். சென்னை அணியை பிடிக்காமல் போனதற்குஸ்ரீசாந்த் கூறிய பதில் இதெல்லாம் ஒரு காரணமா என்று சர்ச்சை ஏற்பட்டுள்ளது.Also Watch : 5 தங்கம் வென்ற என்னை அரசு கண்டுகொள்ளவில்லை: பளுதூக்கும் வீராங்கனை

First published: September 30, 2019, 4:10 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading