6 ஆண்டுகளுக்குப் பின் முடிவுக்கு வந்த வாழ்நாள் தடை... என்ன செய்யப்போகிறார் ஸ்ரீசாந்த்...?

டென்னிஸ் வீரர் பயஸ் 42 வயதிலும் விளையாடி வருகிறார். எனக்கு 38 வயதே ஆகிறது. என்னால் எந்தளவு முடியுமோ அந்தளவு கிரிக்கெட் விளையாட நினைக்கிறேன் என்று ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

news18
Updated: March 15, 2019, 10:10 PM IST
6 ஆண்டுகளுக்குப் பின் முடிவுக்கு வந்த வாழ்நாள் தடை... என்ன செய்யப்போகிறார் ஸ்ரீசாந்த்...?
ஸ்ரீசாந்த்
news18
Updated: March 15, 2019, 10:10 PM IST
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பிசிசிஐ நிச்சயமாக மதிக்கும் என நம்புகிறேன், என்னால் எந்தளவு முடியுமோ அந்தளவு கிரிக்கெட் விளையாட நினைக்கிறேன் என்று ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

2013-ம் ஆண்டு நடந்த 6-வது ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் சூதாட்டம் செய்தை டெல்லி காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதில், தொடர்புடையவர்கள் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜீத் சாண்டிலியா, அங்கீத் சவான் ஆகியோர் கைது செய்து செய்யப்பட்டனர்.

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கும் ஆயுள்கால தடை விதித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு (பிசிசிஐ) நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பாக வழக்கை விசாரித்து வந்த கேரள உயர்நீதிமன்றம் ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து பிசிசிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கின் இன்று தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம், ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

See Also... ஆர்யா - சாயிஷா திருமண வரவேற்பு ஃபோட்டோஸ்!

அத்துடன், மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது குறித்து ஸ்ரீசாந்த் அளித்துள்ள மனுவிற்கு, பிசிசிஐ மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் மகிழ்ச்சி அடைந்துள்ள ஸ்ரீசாந்த், மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்க முடிவு செய்துள்ளார். “டென்னிஸ் வீரர் பயஸ் 42 வயதிலும் விளையாடி வருகிறார். எனக்கு 38 வயதே ஆகிறது. என்னால் எந்தளவு முடியுமோ அந்தளவு கிரிக்கெட் விளையாட நினைக்கிறேன். இந்த தீர்ப்புக்குப் பிறகாவது என்னை நுழைய விடாமல் தடுத்த மைதானத்துக்குள் செல்ல முடியும்.
Loading...
ஸ்காட்லாண்டில் நடைபெறும் கிளப் போட்டிகளில் விளையாடலாம் என முடிவு செய்துள்ளேன். என் குடும்பத்தின் நம்பிக்கைக்காகவே மீண்டும் கிரிக்கெட் விளையாட முடிவெடுத்துள்ளேன்” என்று ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

Also See...

First published: March 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...