• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பொய் குற்றச்சாட்டால் ஒருவரின் வாழ்வை அழிக்கமுடியும்: பிசிசிஐக்கு ஸ்ரீசாந்த் மனைவி உருக்கமான கடிதம்!

பொய் குற்றச்சாட்டால் ஒருவரின் வாழ்வை அழிக்கமுடியும்: பிசிசிஐக்கு ஸ்ரீசாந்த் மனைவி உருக்கமான கடிதம்!

ஸ்ரீசாந்த். (கோப்புப்படம்)

ஸ்ரீசாந்த். (கோப்புப்படம்)

Sreesanth's Wife Writes In Open Letter To BCCI | சூதாட்டப் புகாரில் இருந்து ஸ்ரீசாந்தை நீதிமன்றம் விடுவித்தும் பிசிசிஐ வாழ்நாள் தடையை நீக்கவில்லை.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்க வேண்டும் என்று அவரது மனைவி, பிசிசிஐக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    கடந்த 2013-ம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியதுபோது வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கேரளாவைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா மற்றும் அங்கீத் சவான் ஆகிய மூன்று பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். இந்த 3 வீரர்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாழ்நாள் தடைவிதித்து பிசிசிஐ நடவடிக்கை எடுத்தது.

    Sreesanth Test
    டெஸ்ட் போட்டியின்போது ஸ்ரீகாந்த் (Reuters)


    சில ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கின் விசாரணை முடிவில், 2015-ம் ஆண்டு ஸ்ரீசாந்த் குற்றமற்றவர் என்று கூறி டெல்லி நீதிமன்றம் விடுவித்தது. பின்னர், கேரளா உயர்நீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீட்டு வழக்கில் ஸ்ரீசாந்த்-க்கு மீண்டும் தடைவிதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் மேல்முறையீடு செய்து விடுதலை பெற்றார். சூதாட்ட புகாரில் இருந்து ஸ்ரீசாந்தை நீதிமன்றம் விடுவித்த பிறகும், பிசிசிஐ தனது தடையை நீக்கவில்லை.

    இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால், வெளிநாட்டு அணிக்கு விளையாடுவேன் என்று ஸ்ரீசாந்த் தெரிவித்தார். ஆனால், ஒரு கிரிக்கெட் சங்கத்தால் தடைவிதிக்கப்பட்ட வீரர், மற்ற நாட்டு அணிக்காக விளையாட முடியாது. இதனால், மனமுடைந்த ஸ்ரீசாந்த் தற்கொலைக்கு முயற்சித்ததாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.



    ஸ்ரீசாந்த் தற்கொலைக்கு முயற்சித்த தகவலறிந்த அவரது மனைவி, பிசிசிஐ-க்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “மிகுந்த கனத்த இதயத்துடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன். தவறான குற்றச்சாட்டால் ஒருவருன் வாழ்க்கை அழிக்கமுடியும். ஸ்ரீசாந்தை நீதிமன்றம் விடுவித்த பிறகு பிசிசிஐ தடையை விலக்க மறுக்குகிறது. வாழ்தடையை பிசிசிஐ நீக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.



    Also See...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: