ஸ்பின்னர் ஜடேஜா ‘யார்க்கர்’ ஜடேஜாவானார், 4 விக்கெட்டுகள், ஸ்மித்தை ரன் அவுட்டில் வெளியேற்றினார்: ஆஸி. 338 ரன்களுக்கு ஆல் அவுட்

ஸ்பின்னர் ஜடேஜா ‘யார்க்கர்’ ஜடேஜாவானார், 4 விக்கெட்டுகள், ஸ்மித்தை ரன் அவுட்டில் வெளியேற்றினார்: ஆஸி. 338 ரன்களுக்கு ஆல் அவுட்

சிட்னி டெஸ்ட்: ஜடேஜா 4 விக்கெட்டுகள், ஸ்மித்தை ரன் அவுட் செய்தார்.

இந்திய அணி எதிர்பார்த்ததை விட இந்த ஸ்லோ பிட்சில் ஆஸ்திரேலிய அணியை மட்டுப்படுத்தியுள்ளனர் என்றே கூற வேண்டும். ஆஸ்திரேலிய அணி 400 ரன்களை எடுக்காததில் ஏமாற்றமடைந்திருப்பார்கள்.

  • Share this:
சிட்னி டெஸ்ட் போட்டியில் 166/2 என்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியா மேலும் 172 ரன்களைச் சேர்ப்பதற்குள் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து 338 ரன்களுக்கு தன் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்துள்ளது.

இதற்குப் பிரதான காரணம் ஜடேஜாவென்றால் மிகையாகாது. லபுஷேனை சதம் எடுக்க விடாமல் 91 ரன்களுக்குக் காலி செய்த ஜடேஜா, மேலேறி வந்த மேத்யூ வேடை ஏமாற்றி கேட்ச் கொடுக்கச் செய்து வீழ்த்தினார்.

கடைசியில் பாட் கமின்ஸ், நேதன் லயன் இருவரையும் யார்க்கர் வீசி டக் அவுட் ஆக்கினார். கமின்ஸ் பவுல்டு ஆக லயன் பிளம்ப் எல்.பி. ஆகி வெளியேறினார்.

ஸ்டீவ் ஸ்மித் பின் வரிசை வீரர்களை வைத்துக் கொண்டு ஆடுவதில் சூரர். இந்த முறையும் கடைசியில் ஷாட்களை ஆடி பவுண்டரிகளை விளாசத் தொடங்கினார்.

அவர் கடைசியில் 226 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து விரைவாக ஒரு ரன்னை எடுக்க ஓடும் போது ஜடேஜாவின் நேர் த்ரோ ஸ்டம்பைப் பதம் பார்க்க ரன் அவுட் ஆகி வெளியேறினார்.மிட்செல் ஸ்டார்க் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 24 ரன்கள் எடுத்து சைனியிடம் ஆட்டமிழந்தார். சைனி பந்து வீச்சில் கட்டுக்கோப்பு இல்லை. 13 ஓவர்களில் 65 ரன்களை ஓவருக்கு 5 ரன்கள் விகிதத்தில் அவர் கொடுத்துள்ளார். இது நல்ல டெஸ்ட் பவுலிங் இல்லை.

இன்றைய நாயகன் ஸ்மித், இந்திய அணியில் ஜடேஜா, டெய்ல் எண்டர்க்ளுக்கு யார்க்கர் வீசி வீழ்த்தியது ஆஸ்திரேலியாவின் வலுவான டெய்ல் எண்டர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஸ்டீவ் ஸ்மித் ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் தான் யார் என்பதைக் காட்டினார். பெரிய வீரர்களை எப்போதும் வீழ்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும், நிற்க விட்டால் அவர்கள் ஆட்டத்தை எதிரணியிடமிருந்து பிடுங்கிச் சென்று விடுவார்கள் என்பதற்கு ஸ்டீவ் ஸ்மித் ஒரு உதாரணம்,

ஆனால் இந்திய அணி எதிர்பார்த்ததை விட இந்த ஸ்லோ பிட்சில் ஆஸ்திரேலிய அணியை மட்டுப்படுத்தியுள்ளனர் என்றே கூற வேண்டும். ஆஸ்திரேலிய அணி 400 ரன்களை எடுக்காததில் ஏமாற்றமடைந்திருப்பார்கள்.

இந்திய அணி இறங்கி ஆடி வருகிறது, ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் களத்தில் இருக்கின்றனர்.
Published by:Muthukumar
First published: