''தோனிக்காக இருக்கையை ரிசர்வ் செய்துள்ளோம்; ரொம்பவே மிஸ் செய்கிறோம்'' - சஹால் உருக்கம்

''தோனிக்காக இருக்கையை ரிசர்வ் செய்துள்ளோம்; ரொம்பவே மிஸ் செய்கிறோம்'' - சஹால் உருக்கம்
சஹால்
  • News18
  • Last Updated: January 28, 2020, 4:40 PM IST
  • Share this:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து சுழற்பந்து வீச்சாளர் சஹால் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் 2 போட்டிகளை வென்றுள்ளது. 3வது டி20 போட்டி ஹாமில்டன் மைதானத்தில் நாளை(ஜனவரி 29) நடைபெற உள்ளது.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹால் சக வீரர்களிடம் பேட்டி எடுப்பது, உரையாடுவது போன்ற வீடியோவை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதேப் போன்று தற்போது வீரர்களுக்கான பேருந்தில் பயணிக்கும் போது ராகுல், பும்ரா, சமி மற்றும் குல்தீப் ஆகியோருடன் குறும்பாக விளையாடி மகிழ்ந்த வீடியோவை வெளியிட்டார்.


அந்த வீடியோவில்இறுதியாக பேருந்தின் கடைசி இருக்கைக்கு வந்த அவர்,”இங்கு ஒரு மூத்தவீரர் தான் வழக்கமாக அமர்வார். நாங்கள் அனைவரும் அவரை எப்போதும் மிஸ் செய்கிறோம். இந்த இருக்கையை நாங்கள் அவருக்காகவே ரிசர்வ் செய்துவைத்துள்ளோம். அதனாலேயே நாங்கள் யாரும், அவருக்குப் பின் இந்த இருக்கையில் உட்காருவதில்லை” என்று உணர்வுப்பூர்வமாக தோனியை நினைவுகூர்ந்தார்.இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி தோல்விக்கு பின் இந்திய அணியில் இடம்பெறவில்லை. சமீபத்தில் வெளியான பிசிசிஐயின் ஒப்பந்த வீரர்களுக்கான பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெறவில்லை.உலக கிரிக்கெட் அரங்கில் தோனிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில் இதுபோன்ற நிகழ்வுகள் அனைத்தும் அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துவருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் தோனி மீண்டும் தன்னை நிரூபித்து, இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் ஐபிஎல் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

அவர் மீண்டு வருவார், மீண்டும் அந்த கடைசி இருக்கையில் கம்பீரமாக அமர்வார் என்ற நம்பிக்கையில் நாமும் காத்திருப்போம்..!

Also read... எந்த நாட்டிற்கு போனாலும் இதை மட்டும் விடமாட்டேன்... பிட்னெஸில் தெறிக்கவிடும் கோலி!

First published: January 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading