ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஐசிசி டெஸ்ட் தர வரிசை பட்டியலில் அஷ்வின், ஷ்ரேயாஸ் முன்னேற்றம்…

ஐசிசி டெஸ்ட் தர வரிசை பட்டியலில் அஷ்வின், ஷ்ரேயாஸ் முன்னேற்றம்…

அஷ்வின் - ஷ்ரேயாஸ்

அஷ்வின் - ஷ்ரேயாஸ்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவ்வப்போது ஒரு நாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் வீரர்களுடைய தரவரிசை பட்டியலில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியதை தொடர்ந்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின், பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஆகியோர் ஐசிசி தர வரிசை பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.  கிரிக்கெட் வீரர்களின் சிறப்பான ஆட்டத்திற்கு ஏற்ப சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவ்வப்போது ஒரு நாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் வீரர்களுடைய தரவரிசை பட்டியலில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ஷ்ரேயாஸ் ஆகியோரின் தரவரிசைப் பட்டியல் முன்னேற்றம் கண்டுள்ளன.

டெஸ்ட் தரவரிசை பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அஸ்வின் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதேபோன்று வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் 42 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அஷ்வின் அமைந்தார். இதனடிப்படையில் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் 3 இடங்கள் முன்னேறி 84வது இடத்திற்கு அஸ்வின் சென்றுள்ளார். ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் அஸ்வினுக்கு கூடுதலாக 7 புள்ளிகள் அளிக்கப்பட்டுள்ளது. அஸ்வினுடன் சிறப்பான முறையில் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய ஷ்ரேயாஸ் பேட்டிங் தர வரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளார். டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் ஷ்ரேயாஸிற்கு 16வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று இந்திய அணியின் மற்றொரு ஆட்டக்காரரான ரிஷப் பண்ட் 3 புள்ளிகள் கூடுதலாக பெற்று பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் 6ஆவது இடத்திற்கு சென்றுள்ளார். வங்கதேச தொடரில் சிறப்பாக பந்துவீசிய உமேஷ் யாதவ் டெஸ்ட் பவுலர் தரவரிசை பட்டியலில் 38வது இடத்தில் இருந்து 33வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதேபோன்று வங்கதேச கிரிக்கெட் வீரர்களின் தரவரிசை பட்டியலிலும், மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த அணியின் முக்கிய ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் 12-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

‘இது கனவா இல்லை நிஜமா!’ – துணை கேப்டன் பதவியால் சூர்ய குமார் வியப்பு

மற்றொரு பேட்ஸ்மேன் மோமினுல் ஹக் 5 இடங்கள் முன்னேறி 68ஆவது இடத்திலும், ஜாஹிர் உசேன் 7 இடங்கள் முன்னேறி 70-வது இடத்திற்கும் சென்றுள்ளனர். மற்றொரு பேட்ஸ்மேன் நூருல் ஹக் 5 இடங்கள் முன்னேறி 93வது இடத்தை பிடித்துள்ளார்.

பந்துவீச்சாளர்களை பொருத்தளவில் வங்கதேச ஸ்பின்னர்கள் தாஜுல் இஸ்லாம் மற்றும் மெஹ்தி ஹஸன் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு…

தாஜுல் இஸ்லாம் 28 ஆவது இடத்திற்கும், மெஹ்தி ஹசன் 29ஆவது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் 32 ஆவது இடத்தில் உள்ளார்.

First published:

Tags: Cricket