சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஆடம் கில் கிறிஸ்டின் சாதனையை தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் குவின்டன் டி காக் முறியடித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றிய நிலையில், கடைசி மற்றும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 287 ரன்களை எடுத்தது.
அதிகபட்சமாக அந்த அணியின் குவின்டன் டி காக் 124 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோர் உயர்வதற்கு உதவினார். இன்றைய சதத்துடன் 29 வயதாகும் குவின்டன் டி காக் மொத்தமாக 17 சதங்களை ஒரு நாள் போட்டிகளில் அடித்துள்ளார்.
இதையும் படிங்க :
''கோலி கேப்டனாக இருந்தபோது வீரர்களிடம் இருந்த துடிப்பு இப்போது இல்லை'' - சரண்தீப் சிங்
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 16 சதங்களை அடித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை குவின்டன் டி காக் முறியடித்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைப் பொருத்தவரையில் அதிகபட்சமாக இலங்கையின் குமார் சங்கக்கரா 23 சதங்களை பதிவு செய்துள்ளார். தற்போது 2ம் இடத்தில் இருக்கும் குவின்டன் டி காக்கிற்கு சங்கக்கராவின் சாதனையை முறியடிப்பதற்கு இன்னும் 7 சதங்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
இதையும் படிங்க :
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை நடத்த 4 இடங்கள் தேர்வு...
கில்கிறிஸ்டிற்கு அடுத்தடுத்த இடங்களில் ஏ.பி. டிவில்லியர்ஸ், ஷாய் ஹோப், எம்.எஸ்.தோனி ஆகியோர் உள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.